azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Monday, 28 May 2012 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Monday, 28 May 2012 (As it appears in 'Prasanthi Nilayam')

The Law of Karma is not an irreversible iron law. Dedication to the divine and purification of thoughts, words and deeds invite divine benediction. The effects of karma can be modified and its rigour, mitigated through grace. When vices hold sway over your heart, it becomes foul and sooty. The flames of desire, anger and miserliness (kaama, krodha and lobha) leave char within your heart. Do not despair or lose heart if vices trouble you. There is no place where God is not present. There is no being to whom He denies blessings. Grace manifests itself by quenching the flames within your heart and confers bliss which desire, anger and miserliness can never confer. God is immanent and eternal. Follow the path and obey the ideals laid down by the Lord with relentless discipline. Your mind will be purified and divine grace will be reflected therein.
கர்ம வினை என்பது மாற்ற முடியாத,இரும்பைப் போன்ற கடினமான ஒன்றல்ல. இறைவனைப் பணிந்து எண்ணம்,சொல்,செயல் ஆகியவற்றைத் தூய்மைப் படுத்துவது இறை அருளை வரவழைக்கிறது.கர்மாவின் தாக்கத்தை மாற்றி, அதனது தீவிரத்தை இறை அருளின் மூலம் தணிக்க முடியும். எப்போது தீய குணங்கள் உங்கள் இதயத்தை ஆக்கிரமித்துக் கொள்கின்றனவோ, அது களங்கமுற்று,கரை படிந்ததாகி விடுகிறது. காம, க்ரோத, லோபக் கனல்கள் இதயத்தை கருக்கி விடுகின்றன.தீய குணங்கள் உங்களை துன்புறுத்தும்போது, மனம் தளராதீர்கள். இறைவன் இல்லாத இடமே இல்லை. எந்த ஜீவ ராசிக்கும் அவன் அருள் பொழிய மறுப்பதில்லை. இறை அருளானது, இதயத்தில் கொழுந்து விட்டு எரியும் தணலைத் தணித்து,ஆசைகள்,கோபம் மற்றும் லோபம் ஒரு போதும் தர இயலாத ஆனந்தத்தை அளிப்பதன் மூலம் வெளிப்படுகிறது.இறைவன் அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்தவன்,நிரந்தரமானவன்.இறைவன் வகுத்த வழியையும், கொள்கைகளையும் இடையறாத கட்டுப்பாட்டுடன் பின்பற்றுங்கள். உங்கள் மனம் தூய்மையாக்கப் பட்டு,இறை அருள் அதில் பிரதிபலிக்கும்.