azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Friday, 25 May 2012 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Friday, 25 May 2012 (As it appears in 'Prasanthi Nilayam')

Everyone has their own strengths and weaknesses, foibles and fears, skills and handicaps, so no one prescription can be suggested for all. It is necessary for every individual to do a rigorous self-examination to remove all evil from oneself. A patient has to take the prescribed drugs and follow the instructions that are beneficial to cure the ailment. The patient cannot ask for sweet medicines and comfort. So too people are normally attached to physical comfort and objective pleasure and try to hide their defects, instead of trying to remove them. People buy dark coloured clothes, so that they may not reveal its dirt; they do not prefer white clothes, for they show plainly their soiled condition. But, do not try to hide your dirt in darkness; be repentful of soiled natures and endeavour to cleanse them fast.(Divine Discourse, Mar 16, 1966.)
The supreme virtue is to forget one’s individual differences with others and move with all in a spirit of equality and harmony. - Baba
ஒவ்வொருவருக்கும் அவர்களுக்கே உரித்தான பலமும்,பலவீனங்களும், குறைகளும், அச்சங்களும், திறமைகளும்,திறமையின்மையும் உள்ளன; எனவே அனைவருக்கும் ஒரே மாதிரியான விதி முறைகளை பரிந்துரைக்க முடியாது.ஒவ்வொரு மனிதனும், தன்னுள் உள்ள தீய குணங்களை நீக்க, கடுமையான சுய ஆய்வு செய்து கொள்வது மிக அவசியம். ஒரு நோயாளி பரிந்துரைக்கப் பட்ட மருந்துகளை எடுத்துக் கொள்வதோடு, நோயை குணப்படுத்துவதற்காக கொடுக்கப் பட்ட வழிமுறைகளையும் பின்பற்ற வேண்டும். நோயாளி, இனிப்பான மருந்துகளையும்,சுகங்களையும் கோர முடியாது. அதைப் போலவே, மனிதர்களும், சாதாரணமாக உடல் வசதிகளையும், உலகியலான சந்தோஷங்களையும் சார்ந்திருந்து, தங்களது குறைகளை களைவதற்கு பதிலாக, அவற்றை மறைக்க முயலுகிறார்கள். மனிதர்கள் ஆழ்ந்த வண்ண உடைகளை வாங்குகிறார்கள்; ஏனெனில், அவை அழுக்கை வெளிக்காட்டாது; வெள்ளை நிற உடைகளை விரும்புவதில்லை, ஏனெனில் அவை கறைகளை வெளிக்காட்டி விடும். ஆனால் உங்களது அழுக்குகளை இருட்டில் மறைக்க முயலாதீர்கள்; உங்களது கறை படிந்த செயல்களுக்காக மனமார வருந்தி, அவற்றை விரைவில் அகற்ற விழையுங்கள்.
பிறருடன் தமக்கு உள்ள வித்தியாசங்களை மறந்து அனைவருடனும் சமத்துவம் மற்றும் இசைவான உணர்வுடன் பழகுவதே மிக உயர்ந்த நற்பண்பாகும் - பாபா