azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Thursday, 24 May 2012 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Thursday, 24 May 2012 (As it appears in 'Prasanthi Nilayam')

When you want breeze, you start the fan; when you want light, you switch on the lamp; when you want to cook, you light the stove; when you want to address a vast audience, you arrange a mike and loudspeakers and switch them on. If it is printing you require, you operate the printer with a knob. Consider these as separate operations and you will notice that they are unrelated to one another. Light and air, heat and sound, are unconnected; they are distinct in every way, it would seem. But for all these, the Kartha, the energizer, is the same - the electric current. The expressions and manifestations may be different; but the basis, the inspiration, the latent potency, or the base is the same. Like electricity, God too operates through all instruments, and awards the consequences of all the activities done by everyone; He is the inner motivator of all beings.(Geetha Vahini, Chap 15)
Do all acts as offerings to God; do not classify some as ‘my work’
and some as ‘His’ work. - Baba
உங்களுக்குக் காற்று வேண்டும் என்றால் மின்விசிறியை சுழலவிடுகிறீர்கள்; ஒளி வேண்டும் என்றால் மின் விளக்கைப் போடுகிறீர்கள்; சமைக்க வேண்டும் என்றால் அடுப்பை ஏற்றுகிறீர்கள்; ஒரு கூட்டத்தில் பேச வேண்டும் என்றால் மைக்கையும் ஒலிப்பான்களையும் அமைத்து அவற்றை இயக்கத் தொடங்குகிறீர்கள்.பிரிண்டிங்க் செய்ய வேண்டும் என்றால் அதற்கான கருவியைத் துவக்குகிறீர்கள்.இவை அனைத்தும் தனித்தனியான வேலைகள்; அவை ஒன்றுக் கொன்று சம்பந்தப் பட்டவை அல்ல என்பதைப் பார்க்கிறீர்கள். ஒளி,காற்று, வெப்பம்,ஒலி ஒன்றுக்கொன்று சம்பந்தம் இல்லாதவை;ஒவ்வொரு வித்திலும் தனித்தன்மை உடையவை போன்று தோன்றலாம். ஆனால் இவை அனைத்திற்கும் சக்தி அளித்து இயக்குவது ஒன்றே ,அதுவே மின்சாரம். வெளிப்பாடுகளும்,வெளித் தோற்றங்களும் வெவ்வேறாக இருக்கலாம், ஆனால் இவற்றின் ஆதாரம், தூண்டுதல், உள்ளார்ந்த திறன் மேலும் அடிப்படை ஒன்றே. மின்சாரத்தைப் போலவே இறைவனும் அனைத்து கருவிகளின் மூலம் இயங்கி ஒவ்வொருவரின் அனைத்து செயல்களுக்கும் ஏற்ற பலன்களை அளிக்கிறான்; அனைத்து ஜீவராசிகளையும் உள்ளிருந்து இயக்குபவன் அவனே.
அனைத்து செயல்களையும் இறைவனுக்கு அர்ப்பணமாகச் செய்யுங்கள்; சிலவற்றை ' என் வேலை '' என்றும் சிலவற்றை '' இறைவன் வேலை'' என்றும் பாகுபடுத்தாதீர்கள் - பாபா