azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Wednesday, 23 May 2012 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Wednesday, 23 May 2012 (As it appears in 'Prasanthi Nilayam')

When you try to cook a meal, you may have with you all the materials you need – rice, dal (lentils), salt, lime, spices, vegetables, etc. But unless you have fire to cook these, the dish cannot be prepared. So too, all forms of worship, contemplation, yoga or meditation are ineffective if the knowledge of one's basic Reality and Identity is not there to warm up the process. The Atma is the source and spring of all joy and peace; this has to be cognised and dwelt upon. Without this realisation, human life is an opportunity that is lost. Awareness of one’s true identity is the sign of wisdom, the lighting of the lamp which scatters darkness.(Divine Discourse, Mar 16, 1966.)
நீங்கள் சமைக்க முற்படும் போது,உங்களிடம் அதற்குத் தேவையான அரிசி, பருப்பு, உப்பு, எலுமிச்சம்பழம், வாசனைப் பொருட்கள், காய்கறிகள் ஆகியவை இருக்கலாம். ஆனால் இவற்றைச் சமைப்பதற்குத் தேவையான நெருப்பு இல்லை என்றால் அந்த சமையலைத் தயார் செய்ய இயலாது.அதைப் போலவே, எல்லா விதமான வழிபாடுகள்,தியானம் அல்லது யோகம் என்ற அனைத்தும், அவற்றிற்கு வெப்பம் அளிக்கும் தனது உண்மை நிலையைப் பற்றிய அறிவு இல்லை என்றால், பயனளிக்காது. ஆத்மாவே அனைத்து சாந்தி சந்தோஷங்களுக்கான மூலாதாரமும் ஊற்றும் ஆகும்; இதை உணர்ந்து அதைப் பற்றி சிந்திந்தல் வேண்டும்.இந்த உணர்வின்றி, மனித வாழ்க்கை அரிய வாய்ப்பினை இழந்த ஒன்றாகி விடும்.தனது உண்மை நிலையை உணர்வதே இருளை நீக்கும் விளக்கினைப் போன்ற ஞானத்தின் அடையாளமாகும்.