azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Tuesday, 22 May 2012 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Tuesday, 22 May 2012 (As it appears in 'Prasanthi Nilayam')

Life is raised on four pillars – Righteousness, Wealth, Desire and Liberation (Dharma, Artha, Kama and Moksha). When two key pillars, Righteousness and Liberation, are lost, it is a struggle to survive with the remaining two - Desire and Wealth. Then, naturally grief, greed, pretence and anxiety afflict human beings. Each pillar must cooperate and complement the other three pillars. Righteousness must interpenetrate and strengthen Wealth and Desire, so that Liberation can be attained. Through Righteousness alone, wealth for living must be obtained and it should be used for Righteous purposes. Desire must be directed to Liberation from bondage – not to forging of new chains or adding further links in the chain of birth and death. Devoid of Righteousness and Desire for Liberation, human beings will be reduced to the level of beasts and birds.(Divine Discourse, Apr 10, 1965.)
If there is righteousness in the heart, there will be beauty in character. If there is beauty in character, there will be harmony in the home. -Baba
வாழ்க்கை தர்மம்,அர்த்தம் ( செல்வம் ),காமம்,மோக்ஷம் என்ற நான்கு தூண்களின் மீது எழுப்பட்ட ஒன்று. எப்போது அவற்றில் மிக முக்கியமான இரண்டு தூண்களான தர்மமும், மோக்ஷமும் தொலைந்து விடுகிறதோ,மீதமுள்ள இரண்டு தூண்களான காமத்தையும், செல்வத்தையும் மட்டும் வைத்துக் கொண்டு இருப்பது ஒரு போராட்டமே. பின்னர், துயரம், பேராசை ,நடிப்பு மற்றும் கவலைகள் மனிதர்களை பீடிக்கின்றன.ஒவ்வொரு தூணும், மற்ற மூன்று தூண்களுடன் ஒத்துழைத்து உறுதுணையாக இருக்க வேண்டும். காமத்தையும், அர்த்தத்தையும் தர்மம் ஊடுருவி, வலிமை ஊட்டுவதன் மூலமே மோக்ஷத்தை அடைய இயலும். தர்ம வழிகளில் மட்டுமே வாழ்க்கைக்கான செல்வம் ( அர்த்தம்) ஈட்டப் படவேண்டும் மேலும் அது தர்ம காரியங்களுக்காகவே செலவிடப் பட வேண்டும். காமம் ( ஆசை) பிணிப்புகளிலிருந்து விடுதலை அளிக்கும் மோக்ஷத்தை நோக்கியே இருக்க வேண்டுமே அன்றி பிறப்பு,இறப்பு என்று சங்கிலியின் பிணைப்புகளையோ, அல்லது புதிய பந்தங்களையோ ஏற்படுத்துவதற்காக இருத்தல் கூடாது. தர்மமும்,மோக்ஷத்திற்கான ஆசையும் இல்லை எனில் மனிதர்கள் மிருகங்கள் மற்றும் பறவைகளின் நிலைக்கு தாழ்த்தப் பட்டு விடுவார்கள்.
இதயத்தில் தர்மம் இருந்தால், பண்புகளில் அழகு இருக்கும். பண்புகளில் அழகு இருந்தால் வீடுகளில் இனிமையான இசைவு இருக்கும் - பாபா