azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Sunday, 20 May 2012 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Sunday, 20 May 2012 (As it appears in 'Prasanthi Nilayam')

When fire rages and gets destructive, you immediately try to put it out by throwing sand and water, is it not? In most buildings, people keep a stock of these in readiness. Are you aware that you have six flames burning inside you? They are lust, anger, greed, attachment, pride and hatred. They can emerge any time. What do you have in store to put them out? Always keep a ready stock of Truth, Right Conduct, Peace, Love and Non-Violence in plenty. These five will help you scotch the flames of your six enemies, whenever they are lit; these values are very effective extinguishers.(Divine Discourse, Apr 6, 1965.)
Desire destroys devotion, anger kills wisdom and greed nullifies good work – hence these bad qualities must be sacrificed. -Baba
எப்போது தீ கொழுந்து விட்டு எரிந்து,அழிவை ஏற்படுத்துகிறதோ, அப்போது அதன் மீது மணலையும் தண்ணீரையும் கொட்டி அதை அணைக்க முயல்கிறீர்கள் அல்லவா? அநேக கட்டிடங்களில் இவற்றைத் தயாராக வைத்திருப்பார்கள்.உங்களுள் ஆறு தீக்கனல்கள் கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருப்பதை நீங்கள் அறிவீர்களா? அவையே காம, க்ரோத, மோஹ, லோப,மத மற்றும் மாத்ஸர்யங்கள். (ஆசை, கோபம், பற்றுதல்,பேராசை, கர்வம் மற்றும் பொறாமை). அவை எப்போது வேண்டுமானாலும் வெளி வரும். இவற்றை அணைப்பதற்கு நீங்கள் எதைத் தயாராக வைத்திருக்கிறீர்கள் ? எப்போதும் சத்யம், தர்மம், சாந்தி, ப்ரேமை மற்றும் அஹிம்ஸை ஆகியவற்றை அதிக அளவில் தயாராக வைத்திருங்கள். உங்களது அந்த ஆறு பகைவர்கள் எப்போது பற்றிக் கொண்டாலும், இந்த ஐந்து பண்புகளும் அவற்றைத் தணிக்க உதவும்;இவை சிறப்பாக பணியாற்றக்கூடிய அணைப்புக் கருவிகள்.
ஆசை பக்தியை அழிக்கும்; கோபம் அறிவைக் கொல்லும் மற்றும் பேராசை நற்பணிகளை பயனற்றதாக்கி விடும் - எனவே இந்த தீய குணங்களை கட்டாயம் விட்டொழித்தே ஆக வேண்டும் - பாபா