azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Saturday, 19 May 2012 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Saturday, 19 May 2012 (As it appears in 'Prasanthi Nilayam')

The recognition of one’s innate Divinity, and the regulation of one’s daily life in accordance with that Truth are the guiding stars for those who are caught in the currents of strife and struggle. Without that Self-Knowledge life becomes a farce, a mockery! Acquiring this awareness of the Self makes life earnest, sweet and fruitful. Many people are not aware of this noble goal in the pilgrimage of life. They put their faith in things outside themselves and plan to derive joy from and through them, and end up experiencing pain and disaster. Know that all joys spring only from the heart within you. When you experience joy from worldly objects or people, realize that it is your own joy being reflected back to you.(Divine Discourse, March 16, 1966.)
God is the source of t he highest joy. People yearn for joy, but they accept the counterfeit joy given by the senses as genuine. -Baba
வாழ்க்கையின் சச்சரவு மற்றும் போராட்டச் சூழலின் அலைகளில் மாட்டிக் கொண்டு தவிப்பவர்களுக்கு, தங்களது உள்ளார்ந்த தெய்வீகத்தை உணர்வதும், தங்களது தினசரி வாழ்க்கையை அந்த சத்தியத்தின் அடிப்படையில் ஒழுங்குபடுத்துவதுமே வழி காட்டும் தாரகைகைள் போன்றதாகும். அந்த ஆத்ம ஞானம் இல்லை என்றால்,வாழ்க்கை ஒரு நாடகமாக, ஒரு கேலிக்கூத்தாகி விடும்! இந்த ஆத்ம ஞான உணர்வைப் பெறுவது வாழ்க்கையை ஊக்கமுள்ளதாகவும்,இனிமையானதாகவும்,பயனுள்ளதாகவும் ஆக்கும். பலர் வாழ்க்கை என்னும் புனித யாத்திரையின் இந்த சீரிய குறிக்கோளை அறியாதவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் தங்களது நம்பிக்கையை தங்களுக்கு வெளியில் உள்ளவற்றில் வைத்து அவற்றிலிருந்தும், அவைகள் வழியாகவும் சந்தோஷத்தைப் பெற முயன்று, இறுதியில் துன்பத்தையும் ,பேரிடரையும் அனுபவிக்கிறார்கள். அனைத்து ஆனந்தமும் உங்களது உள் இதயத்திலிருந்து தான் ஊற்றெடுக்கின்றன என்பதை அறிந்து கொள்ளுங்கள். உலகப் பொருட்கள் மற்றும் மனிதர்களிடமிருந்து நீங்கள் ஆனந்தத்தை அனுபவிக்கும் போது,உங்களது ஆனந்தமே உங்களுக்கு திரும்பப் பிரதிபலிக்கின்றது என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.
இறைவனே மிக உயர்ந்த ஆனந்தத்தின் மூலாதாரம். மனிதர்கள் ஆனந்தத்திற்காக ஏங்குகிறார்கள், ஆனால் புலன்கள் தரும் போலி ஆனந்தத்தை உண்மையானது என்று ஏற்றுக் கொள்கிறார்கள் - பாபா