azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Friday, 18 May 2012 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Friday, 18 May 2012 (As it appears in 'Prasanthi Nilayam')

Each person eats to satisfy one’s hunger. So too, each one of you must discover the best way to appease your spiritual hunger as well. Do not be led away by the scorn or recommendations of others. Consult your own reality that you create by quietening your senses and controlling your mind; there is a voice that you can hear in that silence. The true sign of your having listened to that voice is your behaviour! A large tree is held and fed by its small roots that dive into the silent earth. So too, if you go deep into the silence of your inner consciousness, your spiritual blossoming is assured.(Divine Discourse, Apr 6, 1965.)
Silence is the speech of a spiritual seeker. -Baba
ஒவ்வொரு மனிதனும் தனது பசியைத் தணிப்பதற்காக உண்கிறான். அதைப் போலவே, நீங்கள் ஒவ்வொருவரும் உங்களது ஆன்மீகப் பசியையும் தீர்ப்பதற்கான சிறந்த வழியைக் கண்டு பிடிக்க வேண்டும். பிறரது இகழ்ச்சி அல்லது பரிந்துரைகளால் வழி தவறிவிடாதீர்கள். உங்களது புலன்களை அமைதிப்படுத்தி,மனதைக் கட்டுப்படுத்தி நீங்கள் உருவாக்கும் உங்களது உண்மை நிலையைக் கலந்து ஆலோசியுங்கள்; அந்த ஆழ்ந்த அமைதியில் ஒரு குரல் உங்களுக்குக் கேட்கும்.அந்தக் குரலை நீங்கள் கேட்டதற்கான அறிகுறி உங்களது நடத்தையே ! மிகப் பெரிய மரம் அமைதியாக பூமிக்குள் ஊடுருவிச் செல்லும் அதனது சிறிய வேர்களால் தாங்கப்பட்டு ஊட்டமும் பெறுகிறது. அதைப் போன்றே உங்களது மனச் சாட்சியின் அமைதியில் நீங்கள் ஆழ்ந்து ஆலோசித்தால்,உங்களது ஆன்மீக மலர்ச்சி உறுதி செய்யப்படும்.
மௌனமே ஒரு ஆன்மீக சாதகனின் உரையாகும் - பாபா