azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Tuesday, 15 May 2012 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Tuesday, 15 May 2012 (As it appears in 'Prasanthi Nilayam')

An empty iron box gets valued when it contains jewels. So too the body will be honoured when it contains the jewel of Divine consciousness and the gems called virtues. Life has to be lived through for the opportunities it provides to unfold human values. Otherwise one becomes a burden upon earth, a mere consumer of food. Life is a steady march towards the goal; it is not a meaningless term of imprisonment or a casual picnic. Even if you have no steady faith in God or in any particular Name or Form of that Immanent Power, start by controlling the vagaries of the mind, the pulls of the ego, and the attractions of sense-attachments. Be helpful to others; then your conscience itself will appreciate you and keep you happy and content, though others may not thank you.(Divine Discourse, April 6, 1965.)
Every life is a journey across time, from ”I” to ”We” to ”He”. -Baba
ஒரு காலி இரும்புப் பெட்டி, ஆபரணங்கள் இருந்தால் மதிப்புடையதாக ஆகி விடுகிறது. அதைப் போன்றே உடலும், தெய்வீகம் என்ற ஆபரணத்தையும், ஒழுக்கங்கள் என்ற மாணிக்கங்களையும் உள்ளே கொண்டிருந்தால் மதிக்கப்படும். மனிதப்பண்புகள் வளருவதற்கு அது தரும் வாய்ப்புகளுக்காக, வாழ்க்கை வாழப்பட வேண்டும். இல்லை என்றால் ஒருவன் உலகிற்கே சுமை போன்றவன்; வெறும் உணவை உட்கொள்ளுபவனே. வாழ்க்கை ஒரு குறிக்கோளை நோக்கிய சீரான பயணமே; அது அர்த்தமற்ற சிறை வாச காலமோ அல்லது வெறும் சுற்றுலாப்பயணமோ அல்ல. உங்களுக்கு இறைவன் மீதோ அல்லது அவனது ஒரு குறிப்பிட்ட நாம, ரூபங்களின் மீதோ நிலையான நம்பிக்கை இல்லை என்றாலும், மன அலைச்சல்களையும், அஹங்காரத்தின் இழுப்பையும், புலன்களின் ஈர்ப்புக்களையும் கட்டுப்படுத்துவதிலிருந்து தொடங்குங்கள். பிறருக்கு உதவி செய்யுங்கள்; பின்னர், மற்றவர்கள் நன்றி கூறாவிட்டாலும், உங்களது மனச்சாட்சியே உங்களை சந்தோஷமாகவும், திருப்தியாகவும் வைத்திருக்கும்.
ஒவ்வொரு வாழ்க்கையும் காலச்சக்கரத்தில், "நான்" என்பதிலிருந்து "நாங்கள்", பின், "நாங்கள்" என்பதிலிருந்து "அவன் (இறைவன்)" என்பதை நோக்கிய பயணமே. - பாபா