azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Sunday, 13 May 2012 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Sunday, 13 May 2012 (As it appears in 'Prasanthi Nilayam')

As the carpenter shapes the wood, the blacksmith moulds the iron and the goldsmith creates beautiful ornaments out of gold, the Lord too shapes every being in His own way. Know that the Lord is the basis for the existence of every being in this Universe; with this knowledge, lose all fear. Exercise discrimination at all times and use the spiritual wisdom you possess, to your advantage. The tiny sparrow sits on the storm tossed bough, because it knows that its wings are strong. It does not depend upon the swaying branch to sustain it. Similarly fully rely on the grace of God, earn it and keep it. Then whatever be the magnitude of the calamity you face, you can survive it without any harm.(Divine Discourse, Apr 4, 1965.)
The Unseen is the basis of all that is seen. Practice to see the
hand of God, every day. -Baba
எப்படி ஒரு தச்சன் மரத்தை உருவமாகப் படைக்கிறானோ,எப்படி ஒரு கொல்லன் இரும்பைப் பட்டறையில் உருவாக்கிறானோ, எப்படி ஒரு ஆசாரி தங்கத்திலிருந்து அழகிய ஆபரணங்களை உருவாக்கிறானோ, அவ்வாறே இறைவனும் ஒவ்வொரு ஜீவராசியையும் தனக்கே உரித்தான வழியில் உருவாக்குகிறார். இந்தப் பிரபஞ்சத்தில் இருக்கும் ஒவ்வொரு ஜீவராசியும் இருப்பதற்கான ஆதாரமே இறைவன் தான் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்; இந்த அறிவின் மூலம் அச்சத்தை தவிர்த்து விடுங்கள். பகுத்தறிவை எல்லா சமயங்களிலும் உபயோகித்து, உங்களிடம் உள்ள ஆன்மீக ஞானத்தை உங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். ஒரு சின்ன சிட்டுக் குருவி புயலில் அல்லாடும் கிளையில் உட்கார்ந்திருக்கும், ஏனெனில், தனது இறக்கைகள் வலிமையானவை என்று அறிந்திருப்பதால். தன்னைத் தாங்கிக் கொள்ள ஆடி அசையும் கிளையை அது சார்ந்திருப்பதில்லை. அதைப் போலவே, இறைவனது அருளைச் சார்ந்திருங்கள், அதை ஈட்டிக் காப்பாற்றிக் கொள்ளுங்கள். பின்னர் எப்படிப் பட்ட பேரிடரை நீங்கள் சந்திக்க நேர்ந்தாலும், அதிலிருந்து எந்தத் தீங்கும் இன்றி பிழைத்துக் கொள்ளலாம்.
கண்களுக்குப் புலப்படும் அனைத்திற்கும் கண்களுக்குப் புலப்படாத ஒன்றே ஆதாரம், ஒவ்வொரு நாளும் இறைவனது கரத்தைக் காண்பதைப் பயிலுங்கள்- பாபா