azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Wednesday, 09 May 2012 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Wednesday, 09 May 2012 (As it appears in 'Prasanthi Nilayam')

When you hold a currency note in your hand and say proudly, “This is mine”, that note laughs at you, for it says, “Oh, how many thousands have I known, who have taken pride like this!” Consider all objects that you collect here, in this life, as given on “trust” to be used in this caravanserai, during your pilgrimage in the field of action (Karmakshetra). You have to return them when you leave – they belong to another. The body is but a tent in the journey of life. Don’t fondle the delusion - ‘my body’. Pine for the Indweller, Dehi. Discover the immortal “I” and know that it is the spark of God, present in you. Live in the companionship of the Supreme.(Divine Discourse, Apr 6, 1965.)
Your thoughts play a vital role in shaping your life. -Baba
ஒரு ரூபாய் நோட்டைக் கையில் வைத்துக் கொண்டு, '' இது என்னுடையது '' என்று பெருமிதமாகக் கூறினீர்கள் என்றால், அந்த நோட்டு உங்களைப் பார்த்து நகைக்கும், ஏனென்றால் அது கூறுமாம்,'' ஓ! இப்படிப் பெருமைப் பட்டுக் கொண்ட எவ்வளவு ஆயிரக்கணக்கானவர்களை நான் பார்த்திருக்கிறேன் '' என்று. உங்களுடைய வாழ்க்கையில் நீங்கள் சேகரிக்கும் பொருட்கள் எல்லாம்,உங்களது வாழ்க்கை எனும் கர்மக்ஷேத்திரத்தின் பயணத்தில்,உங்களது பொறுப்பில் கொடுக்கப் பட்டவை எனக் கருதுங்கள். நீங்கள் போகும்போது அவற்றைத் திருப்பித் தந்தாக வேண்டும் -அவை வேறு ஒருவருக்குச் சொந்தமாகி விடும்.உடல் என்பது வாழ்க்கைப் பயணத்திற்கான ஒரு கூடாரமே.'' என் உடல்'' என்ற மாயையைச் சொந்தம் கொண்டாடாதீர்கள். உள்ளுறையும் '' தேஹி '' என்ற இறைவனுக்காக ஏங்குங்கள். உங்களுள் உறையும், அழிவற்ற, இறைவனின் ஒளிக்கீற்றான '' நான் '' என்பதைக் கண்டு உணருங்கள்.இறைவனுடன் நட்புணர்வில் வாழுங்கள்.
உங்கள் எண்ணங்கள் உங்கள் வாழ்க்கையை உருவாக்குவதில் இன்றியமையாத பங்கு வகிக்கின்றன - பாபா