azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Monday, 07 May 2012 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Monday, 07 May 2012 (As it appears in 'Prasanthi Nilayam')

Some consider themselves great because they have vast property or wealth. But the real wealth and genuine greatness is virtue which earns the grace of God. In the epic Mahabharatha, the Kauravas had everything that the world honoured and envied - arms, ambition, friends, allies, forces and riches. But God was not on their side, for they were wicked. In the end, they reaped disaster and disgrace. From this, you can infer that all the things that the world prides on having, are momentary pleasures. They appear to give happiness when they come, but leave us with grief when they disappear and the joy is temporary. However the grace of God persists without change at all times and all places. It is pure, uncontaminated, unchanging, complete and mighty. Endeavour to earn this grace and the joy that flows from it.(Divine Discourse, Apr 4, 1965.)
சிலர் தங்களை ,பரந்த சொத்தோ அல்லது செல்வமோ இருப்பதால் மிகச் சிறந்தவர்கள் என்று கருதுகிறார்கள்.ஆனால் உண்மையான செல்வம் அல்லது மேன்மை என்பது இறைவனது அருளைத் தர வல்ல ஒழுக்கமே ஆகும். மஹாபாரத இதிகாசத்தில் கௌரவர்களிடம் இந்த உலகம் மதிக்கும் மேலும் பொறாமைப் படும் ஒவ்வொன்றும்- ஆயுதங்கள்,பேரவா,நண்பர்கள், கூட்டாளிகள்,படைகள் மற்றும் செல்வங்கள் என அனைத்தும் இருந்தன. ஆனால், இறைவன் அவர்கள் பக்கத்தில் இல்லை, ஏனெனில் அவர்கள் தீயவர்களாக இருந்ததால். முடிவில் அவர்கள் அழிவையும் இழிவையும் அடைந்தனர். இதிலிருந்து, தமக்கு இருப்பதில் இந்த உலகம் பெறுமை கொள்ளும் அனைத்தும் நிலையற்ற சுகங்களே என்பதை நீங்கள் உணரலாம்.அவை வரும்போது மகிழ்ச்சி அளிப்பது போலத் தோன்றினாலும் அவை மறையும்போது துயரத்தையே நமக்கு விட்டுச் செல்கின்றன; மேலும் அந்த மகிழ்ச்சி தாற்காலிகமானதே.ஆனால் இறைவனது அருளோ எல்லாக் காலங்களிலும் எல்லா இடங்களில் மாறாது நிலைத்து நிற்கிறது. அது தூய்மையானது, மாசற்றது, மாறாதது, முழுமையானது மேலும் வலிமையானது. இந்த அருளையும் அதிலிருந்து வரும் ஆனந்தத்தையும் பெற பெரு முயற்சி செய்யுங்கள்.