azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Saturday, 05 May 2012 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Saturday, 05 May 2012 (As it appears in 'Prasanthi Nilayam')

The heart contains the precious treasure of bliss (Ananda) but people do not know the key to open the lock! The key to open the door to bliss is Namasmarana - repetition of the Name of the Lord with a pure heart. Purify the heart with the instruments of Truth, Right Conduct, Peace and Love (Sathya, Dharma, Shanth, Prema). Always endeavour to do good to others, to think well and speak well of them. This practice will wear away your egoism, and attachment to things that cater to your pleasures. Do not behave like birds and beasts, ever engaged in earning a living or rearing a family. Struggle for higher and nobler goals using the talents with which you are endowed!(Divine Discourse, Apr 4, 1965.)
To evoke the Divine in you, there is no better method than Namasmarana. -Baba
இதயத்தில் விலைமதிப்பற்ற பொக்கிஷமான ஆனந்தம் இருக்கிறது, ஆனால் மனிதர்களுக்கு அதன் பூட்டைத் திறப்பதற்கான சாவி எது என்று தெரியவில்லை! இந்தக் கதவைத் திறப்பதற்கான சாவி நாமஸ்மரணையே- தூய இதயத்துடன் இறைவனது நாமத்தைத் திரும்பத் திரும்பக் கூறுவதே. இதயத்தை சத்யம்,தர்மம், சாந்தி ப்ரேமை என்ற கருவிகளால் தூய்மைப் படுத்துங்கள். எப்போதும் பிறருக்கு நன்மை செய்யவும்,அவர்களைப் பற்றி நல்லவற்றையே எண்ணி ,நல்லமுறையில் பேசவும் முயலுங்கள். இந்தப் பயிற்சி அஹங்காரத்தையும்,உங்களது சுகங்களுக்கு உணவளிக்கும் பொருட்களின் மீதான பற்றுதலையும் அழித்து விடும்.எப்போதும் வாழ்க்கைக்காக சம்பாதிப்பதிலும்,குடும்பத்தை வளர்ப்பதிலும் ஆழ்ந்திருக்கும் பறவைகள் மற்றும் மிருகங்கள் போல நடந்து கொள்ளாதீர்கள்.உங்களுக்கு இறைவனால் அளிக்கப் பட்ட திறன்களை பயன்படுத்தி உயர்ந்த மற்றும் சீரிய குறிக்கோள்களுக்காக பாடுபடுங்கள்.
உங்களுள் உள்ள தெய்வீகத்தைத் தட்டி எழுப்ப நாமஸ்மரணையை விட சிறந்த முறை ஏதுமில்லை - பாபா