azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Friday, 04 May 2012 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Friday, 04 May 2012 (As it appears in 'Prasanthi Nilayam')

Do not aspire to be a servant of God, working for wages; you reduce yourself to that level if you ask for this and that from Him in return for the praise that you offer or the sacrifice you do! Also, let go of the bargaining attitude in your mind, and do not feel disappointed that God did not give you desirable objects in return for all the troubles you took to please Him. Do not calculate profit, do not count on returns, do not plan for the consequences! Do, since it is your duty and you have to do! That is true puja (worship). Dedicate the deed as well as the consequences to Him. Then you become His own and not a labourer demanding wages. That is the highest level a devotee (bhaktha) can attain through sadhana (spiritual effort).(Divine Discourse, Apr 4, 1965.)
Have no desires to place before God, for whatever He does with you, however He treats you, is the gift He likes best to give you. -Baba
இறைவனிடம் கூலிக்கு வேலை செய்யும் வேலைக்காரனாக ஆக விரும்பாதீர்கள்;நீங்கள் சூட்டும் புகழாரத்திற்கும்,செய்யும் தியாகத்திற்கும் வரவாக, அது வேண்டும்,இது வேண்டும் என்று இறைவனைக் கேட்டால், நீங்கள் உங்களை அந்த நிலைக்கே தாழ்த்திக் கொள்கிறீர்கள் ! மேலும் இவ்வாறு பேரம் செய்யும் மனப்பாங்கை விட்டு விட்டு, நீங்கள் அவனை மகிழ்விக்க எடுத்துக் கொண்ட துன்பங்களுக்கு பலனாக, நீங்கள் விரும்பிய பொருட்களை எல்லாம் இறைவன் அளிக்க வில்லையே என்று ஏமாற்றமும் அடையாதீர்கள். லாபத்தைக் கணக்கிடாதீர்கள்; திரும்ப என்ன கிடைக்கும் என்று எண்ணிக்கை செய்யாதீர்கள்; பலன்களுக்காக திட்டமிடாதீர்கள் ! ஆற்றுங்கள் அது உங்கள் கடமை என்பதாலும், அதை நீங்கள் செய்தே ஆக வேண்டும் என்பதாலும். இதுவே உண்மையான வழிபாடு அல்லது பூஜை.உங்களது செயலையும் அதன் பலன்களையும் அவனுக்கே அர்ப்பணம் செய்யுங்கள். பின்னர் நீங்கள் அவனுடையவராகவே ஆகி விடுகிறீர்கள், கூலியை வேண்டும் வேலைக்காரனாக அல்ல. அதுவே ஆன்மீக சாதனையின் மூலம் ஒரு பக்தன் பெறக்கூடிய மிக உயர்ந்த நிலை.
இறைவன் முன் சமர்ப்பிப்பதற்கு என்று எந்த ஆசையையும் வைத்துக் கொள்ளாதீர்கள்; ஏனெனில் அவன் உங்களை என்ன செய்தாலும், எப்படி நடத்தினாலும் அதுவே அவன் உங்களுக்கு வழங்க விரும்பும் மிகச் சிறந்த பரிசாகும்- பாபா