azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Thursday, 03 May 2012 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Thursday, 03 May 2012 (As it appears in 'Prasanthi Nilayam')

Cultivate an atmosphere of love and co-operation with one and all, and you can ensure joy for ever more. Do not seek arguments to keep away from others; seek rather ways of working together for the common good. The sense of ‘I’ and ‘mine’ scotch love and cooperation. Reduce them to the minimum and then start serving the needy and the distressed. Develop character as well as intelligence and health. The most reliable source of strength is not in money, or kinsmen, or physical acumen, but in yourself, the Atman. Delve deep and draw sustenance from it; see it in all; serve it in all. Discipline is another key trait. Every individual and every nation must learn to control the wild nature of passions and emotions; yielding to them brings only ruin. Discipline, self-control, desire to serve - these are the weapons that even the weakest can use, and win the battle of life.(Divine Discourse, Nov 27, 1965)
A disciplined life is the best offering you can make to the country or to the Divine in you. -Baba
அனைவருடனும் அன்புடனும் இசைவுடனும் இருக்கும் சூழ்நிலையை வளர்த்துக் கொள்ளுங்கள்;நீங்கள் சந்தோஷத்தை எப்போதும் உறுதி செய்து கொள்ளலாம். மற்றவர்களிடமிருந்து தனித்து இருப்பதற்கான விவாதங்களைத் தேடாமல்,பொது நன்மைக்காக இணைந்து பாடுபடுவதற்கான வழிகளைத் தேடுங்கள்.'' நான்'','' எனது '' என்ற உணர்வுகள் அன்பையும்,கூட்டுறவையும் அழிக்கின்றன.இவற்றை மிகக் குறைத்துக் கொண்டு, தேவை உள்ளவர்களுக்கும்,துயருற்றவர்களுக்கும் சேவை செய்யத் தொடங்குங்கள். நற்குணங்களோடு கூடவே ,புத்தியையும் உடல் நலத்தையும் வளர்த்துக் கொள்ளுங்கள். மிகவும் நம்பகரமான வலிமையின் மூலாதாரம் பணமோ, உறவுகளோ, உடல் வலிமையோ அல்ல; அது நீங்களே அதாவது ஆத்மாவே. ஆழமாக மூழ்கி, அதிலிருந்து சக்தி பெறுங்கள்; அதையே அனைவரிடமும் கண்டு,அனைவருள்ளும் உள்ள அதற்கே சேவை செய்யுங்கள்.கட்டுப்பாடு மற்றொரு முக்கியமான குணம். ஒவ்வொரு தனி மனிதனும் தேசமும், மூர்க்கத்தனமான உணர்ச்சிகளையும் , மனக்கிளர்ச்சிகளையும் கட்டுப் படுத்தக் கற்றுக் கொள்ள வேண்டும்; அவைகளுக்கு அடிபணிவது அழிவையே தரும். ஒழுக்கம், சுயக் கட்டுப்பாடு,பிறருக்கு சேவை செய்யும் அவா- இவைகளை மிகவும் பலஹீனமானவர் கூட பயன்படுத்தி வாழ்க்கைப் போராட்டத்தில் வெற்றி பெறலாம்.
கட்டுப்பாடான வாழ்க்கையே நீங்கள் நாட்டிற்கும் உங்களுள் உள்ள தெய்வீகத்திற்கும் செலுத்தும் மிகச் சிறந்த காணிக்கையாகும். -பாபா