azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Tuesday, 01 May 2012 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Tuesday, 01 May 2012 (As it appears in 'Prasanthi Nilayam')

Speech is the armament of every human being. Animals have fleetness of foot, sharpness of claw, fang, horn, tusk, beak, talon, etc. But human beings are gifted with speech as a faculty, as their armament. The very first lesson in the primer, for a spiritual aspirant is “Control of Speech.” Through the sweetness of your speech, you can disarm all opposition and defeat all the designs of hatred. Sweetness makes you Pashupathi (Divine). Harshness makes you pashu (Bestial). Mere outward politeness or sweetness is hypocrisy. Sincere speech must flow from the real sweetness of heart, a heart filled with love. Remove all evil from the pellucid lake of your mind and make it a fit abode for the Divine.
பேச்சே மனிதனின் போர் தடவாளம். மிருகங்களுக்கு கால்களின் வேகமாகச் செல்லக்கூடிய திறன், நகம்,கொம்பு,தும்பிக்கை,அலகு,கழுகின் கூர்நகம் போன்றவற்றின் கூர்மை ஆகியவை உள்ளன. ஆனால் மனிதர்களுக்கு பேச்சுத்திறனே அவர்களது போர்தடவாளமாக பரிசளிக்கப் பட்டுள்ளது. ஆன்மீக சாதகனுக்கான முதன் முதல் பாடமே,'' பேச்சைக் கட்டுப்படுத்து '' என்பதே. உங்களது பேச்சின் இனிமையால் அனைத்து எதிரிகளையும் செயலிழக்கச் செய்து, உங்களை வெறுப்பவர்களின் திட்டங்களை முறியடித்து விடலாம்.இனிமையான பேச்சு உங்களை பசுபதி ( இறைவன்)ஆக்குகிறது . கடுமையான வார்த்தைகள் உங்களை பசுவாக ( மிருகமாக) ஆக்கி விடுகிறது. வெறும் வெளிப்படையான மரியாதை அல்லது இனிமை போலித்தனமானது. உளமார்ந்த பேச்சு, அன்பு நிறைந்த,உண்மையான இதயத்தின் இனிமையாக வெளிப்பட வேண்டும். உங்கள் மனம் என்னும் தெளிவான ஏரியிலிருந்து அனைத்து தீமைகளையும் நீக்கி விட்டு, அதை இறைவன் உறைவதற்கு ஏற்ற இடமாக ஆக்குங்கள்.