azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Sunday, 29 Apr 2012 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Sunday, 29 Apr 2012 (As it appears in 'Prasanthi Nilayam')

You need not learn all the shlokas (verses) and the commentaries of the scriptures by heart or engage in contest with other scholars and exhibit your scholarship. It is enough even if you put one verse that suits your spiritual stage and appeals to you the most, into practice. The first step will itself take you nearer to the second step and the second will make the third step easier, and so on until the end. Of what avail is medicine, if it is poured into the ear? It has to be taken in, so that it might act and strengthen the blood stream and restore health. Similarly, there is no use in listening to spiritual discourses for hours. Take the lesson in. Take it to heart and put it into practice. Apply it in daily life. Realize the Divinity in you, that is the lesson.(Divine Discourse, Apr 2, 1965.)
Soft sweet speech is the expression of genuine love. -Baba
நீங்கள் எல்லா ஸ்லோகங்களையும், வேத நூல்களின் விரிவுரைகளையும் மனப்பாடமாகக் கற்றுக் கொள்ளவோ அல்லது மற்ற பண்டிதர்களுடன் போட்டியிட்டு,உங்கள் பாண்டித்யத்தை காட்டிக் கொள்ளவோ தேவை இல்லை. நீங்கள் உங்களது ஆன்மீக நிலைக்கு ஏற்ற,உங்களுக்கு மிகவும் பிடித்த ஏதாவது ஒரு ஸ்லோகத்தையாவது நடைமுறைப் படுத்தினாலே அது போதும். முதல் படியே அடுத்த படிக்கு அருகில் கொண்டு சென்று,இரண்டாவது படி மூன்றாவது நிலையை சுலபமாக்கி, இவ்வாறு ஒவ்வொன்றாக இறுதிவரை உங்களை இட்டுச் செல்லும். சாப்பிட வேண்டிய மருந்தை எடுத்து காதில் விட்டுக் கொள்வதால் என்ன பயன்? அதை உட்கொள்ள வேண்டும்; அது செயலாற்றி ரத்த ஓட்டத்தை வலுப் படுத்தி உங்களது ஆரோக்கியத்தை திரும்ப அளிக்கும். அதே போல ஆன்மீக அருளுரைகளை மணிக்கணக்கில் கேட்டுப் பயனில்லை. அந்தப் பாடத்தை உள் எடுத்துச் செல்லுங்கள். இதயத்தில் ஏற்று, நடைமுறையில் கொண்டு வாருங்கள்.அதை தினசரி வாழ்க்கையில் பயன்படுத்துங்கள். உங்களுள் உள்ள தெய்வீகத்தை உணருங்கள்; அதுவே சரியான பாடமாகும்.
மிருதுவான இனிமையான பேச்சே உண்மையான அன்பின் வெளிப்பாடாகும் - பாபா