azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Saturday, 28 Apr 2012 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Saturday, 28 Apr 2012 (As it appears in 'Prasanthi Nilayam')

Everyone is anxious to avoid old age and death; it is human nature to be anxious. But of what avail is mere anxiety? Your conduct and behaviour should be in accordance with your objective. If you have sincere yearning and place your full trust and faithfully surrender to the Lord, He will melt the fog of grief by the rays of His Grace. If you place your trust on the objects of this world, the consequent grief will never end, nor can they be ended by anyone other than the Lord. Serve the Master of maya (illusion), the Designer of all this dreamland, rather than the dream itself.(Geetha Vahini, Ch 14.)
To the persons who have completely surrendered, everything they experience(good or bad) is a gift from God. -Baba
முதுமையையும்,இறப்பையும் தவிர்க்க வேண்டும் என்ற கவலை ஒவ்வொருவருக்கும் இருக்கிறது; கவலைப் படுவது மனித இயல்பு. வெறும் கவலையால் என்ன பயன்? உங்களது நடத்தையும் பழக்க வழக்கமும் உங்களது குறிக்கோளுக்கு ஏற்றவாறு இருக்க வேண்டும். உங்களுக்கு உளமார்ந்த தாபம் இருந்தால், நீங்கள் உங்களது முழு நம்பிக்கையையும் இறைவன் பால் செலுத்தி, பரிபூரணமாக இறைவனை சரணடைந்து விட்டால், துயரம் என்ற பனிமூட்டத்தை தனது அருட்கதிர்களால் அவர் கலைத்து விடுவார். நீங்கள் உலகப் பொருட்களில் நம்பிக்கை வைத்தால், அதனால் விளையும் துன்பமும் மறையாது; அவற்றை இறைவனைத் தவிர எவராலும் முடித்து வைக்கவும் முடியாது. இந்தக் கனவுகளுக்கு அன்றி, மாயையின் தலைவனான,இந்தக் கனவுலகை வடிவமைத்த அந்த இறைவனுக்கு சேவை செய்யுங்கள் .
பரிபூரண சரணாகதி அடைந்தவர்களுக்கு அவர்கள் அனுபவிக்கும் ஒவ்வொன்றும் ( நன்மையோ,தீமையோ) இறைவன் அருளும் பிரசாதமாகும் - பாபா