azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Thursday, 26 Apr 2012 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Thursday, 26 Apr 2012 (As it appears in 'Prasanthi Nilayam')

The goal of every life is knowing the Supreme, that is, attaining liberation; there can be no second aim. You are endowed with life, not for the purpose of building bungalows, acquisition of estates, accumulation of wealth, addition of progeny, earning of titles or ascent into higher rungs of social life. One’s greatness does not depend on these. The sweetest success in life lies in the winning of permanent bliss and perennial escape from grief and agitation. You are children of immortality. The heritage of immortality must be recognised and experienced; it must be won back. The bonds of name and form are temporary and must be removed. They are not genuine natural characteristics of the individual soul. Escape from grief and joy for a brief period of time is not a sign of real liberation. Real wisdom consists in recognising that you are pure bliss; bliss that persists from the past into the present and the future.(Geetha Vahini, Ch 14.)
If you seek steady and genuine pure state of bliss, you must be attached to God. -Baba
ஒவ்வொரு ஜீவனின் நோக்கமும், பரப்பிரம்மத்தை அறிந்து கொள்வதுதான்; அதாவது மோக்ஷத்தை அடைவது; வேறு எந்த குறிக்கோளும் இருக்க முடியாது.இந்த ஜன்மம் உங்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ளது மாடமாளிகைகளைக் கட்டிக் கொள்வதற்கோ, ஆஸ்திகளை வாங்கிக் கோள்வதற்கோ, செல்வத்தைச் சேர்த்துக் கொள்வதற்கோ, குழந்தை குட்டிகளை அதிகப் படுத்திக் கொள்வதற்கோ, பட்டங்களைப் பெறுவதற்கோ அல்லது சமுதாயத்தில் உயர்ந்த அந்தஸ்தைப் பெறுவதற்கோ அல்ல. ஒருவரது மேன்மை இவற்றைச் சார்ந்தது அல்ல. வாழ்க்கையின் மிக இனிமையான வெற்றி, நிரந்தர ஆனந்தத்தை வெல்வதிலும்,துக்கம் மற்றும் கலக்கத்திலிருந்து இடையறாது தப்பித்துக் கொள்வதிலுமே உள்ளது. நீங்கள் அமரத்துவத்தின் குழந்தைகள். அமரத்துவத்தின் பாரம்பரியத்தைப் புரிந்து கொண்டு அனுபவிக்க வேண்டும்; அதை மறுபடியும் திரும்பப் பெற்று வெற்றி காண வேண்டும். ரூப,நாமங்களின் பந்தங்கள் தாற்காலிகமானவை; அவற்றை நீக்க வேண்டும். அவை தனி மனித ஆத்மாவின் உண்மையான இயல்புகள் அல்ல. குறுகிய காலத்திற்கு இன்ப துன்பங்களிலிருந்து தப்பித்துக் கொள்வது உண்மையான மோக்ஷத்தின் அடையாளம் அல்ல. உண்மையான ஞானம் நீங்கள், இறந்த, தற்கால மற்றும் எதிர்காலங்களிலும் தொடர்ந்து இருக்கும் முழுமையான ஆனந்தமே என்பதை உணர்வதில் தான் உள்ளது.
நீங்கள் நிலையான உண்மையான ஆனந்த நிலையை வேண்டுபவர்களாக இருந்தால், இறைவனைப் பற்றிக் கொள்ள வேண்டும்- பாபா