azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Monday, 23 Apr 2012 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Monday, 23 Apr 2012 (As it appears in 'Prasanthi Nilayam')

A small seed grows slowly into a huge spreading tree. So too, through little acts, soft words and kind deeds, you can elevate yourself into a Divine Being. The worst action is to do the opposite of what you preach – to deny by the hand what you dole out of your mouth. If you cannot act up to your declarations, be quiet. Do not go about advising others on virtues and advertising yourself as a hypocrite. Do not preach dharma (righteousness) while decrying it in deed. Dharma (Righteousness) is steady, unchanging and never declining; those who do not adhere to it do not decline dharma but themselves. One is judged by practise not by the precepts one pours forth.(Divine Discourse, Mar 31, 1965.)
Be good, serviceable, useful, kind and God-fearing – the confidence of the people will be yours. -Baba
ஒரு சிறிய விதை மெதுவாக வளர்ந்து மிகப் பெரிய பரந்து விரிந்த மரமாக வளர்கிறது. அதைப் போலவே, சிறிய காரியங்கள்,இதமான வார்த்தைகள் மேலும் கனிவான செயல்கள் மூலம் நீங்களும் உங்களை தெய்வீக நிலைக்கு உயர்த்திக் கொள்ளலாம்.நீங்கள் போதிப்பதற்கு எதிர்மாறாக செயல்படுவதே மிகவும் மோசமான காரியமாகும்- நாவினால் அள்ளித் தருவதை கையினால் மறுப்பது போன்றதாகும் இது. உங்களது அறிவிப்புக்களின் படி நடக்க இயலவில்லை என்றால் சும்மா இருங்கள்.மற்றவர்களுக்கு ஒழுக்கத்தைப் பற்றி ஆலோசனைகள் கூறி உங்களை வெளிவேஷம் போடுபவராக பறைசாற்றிக் கொள்ளாதீர்கள். செயலில் மறுத்து விட்டு வார்த்தைகளால் தர்மத்தைப் போதிக்காதீர்கள். தர்மம் என்பது நிலையானது,மாறாதது மேலும் என்றும் தாழ்வடையாதது; அதைப் பின்பற்றாதவர்கள்,தங்களைத் தான் தாழ்த்திக் கொள்வார்களே அன்றி தர்மத்தை அல்ல. ஒருவர் தனது செயல்களால் தான் மதிப்பிடப் படுகிறாரே அன்றி அவர் வாயால் அள்ளி வீசும் கொள்கைகளால் அல்ல.
நல்லவராக,சேவை ஆற்றுபவராக,பயனுள்ளவராக,கனிவானவராக,இறைவனுக்கு அஞ்சுபவராக இருங்கள்- பின்னர் மக்களது நம்பிக்கை உங்களுடையதே- பாபா