azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Sunday, 22 Apr 2012 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Sunday, 22 Apr 2012 (As it appears in 'Prasanthi Nilayam')

‘Holy days’ have now become ‘holidays’ when you make merry, eat your fill, go out on picnics and hikes, and generally indulge in sensual pleasures. These typically end in dejection, disease and discord. Sacred places have a subtle and powerful influence on human beings. Attach yourself to the Highest, call it by any name and conceive it in any form. But remember, without dharma (righteousness) you cannot attain it. If you yield to alpabuddhi (inferior thoughts), you will be losing the akhanda-thathwa (principle of the Universal). Don't be led away into the bylanes; keep to the highway.(Geetha Vahini, Chap 14.)
"ஹோலி '' அதாவது புனிதமான நாட்கள் என்பது கும்மாளம் அடித்து, வயிறார உண்டு, உல்லாசப் பயணங்கள் மற்றும் சுற்றுலாக்களுக்குச் சென்று, பொதுவாக புலனின்பங்களில் ஈடுபடும் '' ஹாலிடேஸ்'' என்ற விடுமுறை நாட்களாக ஆகி விட்டது. இவை குறிப்பாக மன உளைச்சல், வியாதி, அமைதியின்மை ஆகியவற்றில் சென்று முடிகின்றன.புனிதத் தலங்கள் மனிதர்களுள் இதமான மற்றும் வலிமையுள்ள தாக்கத்தை ஏற்படுத்த வல்லவை. எந்த நாமமாகவும், எந்த ரூபமாகவும் இருந்தாலும் சரி மிக உயர்ந்த அந்த தெய்வீகத்துடன் உங்களை இணைத்துக் கொள்ளுங்கள். ஆனால் தர்மத்தைக் கடைப்பிடிக்காது, நீங்கள் அதை அடைய முடியாது என்பதை நினைவில் கொள்ளுங்கள். நீங்கள் கீழ்த்தரமான எண்ணங்களுக்கு ( அல்ப புத்தி) இடமளித்தால், அகண்ட தத்துவத்தை இழந்து விடுவீர்கள். கிளைச் சந்துகளில் வழி தவறி விடாது, ராஜபாட்டையில் செல்லுங்கள்.