azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Thursday, 19 Apr 2012 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Thursday, 19 Apr 2012 (As it appears in 'Prasanthi Nilayam')

You must tread the spiritual path with an unstoppable urge to reach the goal, and must cultivate the yearning for liberation. You have to dwell in a home built on the four strong pillars – Righteousness, Wealth, Desire and Liberation (Dharma, Artha, Kama, Moksha). That is, Righteousness should be the means to acquire Wealth and Liberation should be the only Desire. However much you may earn wealth or garner strength, unless you tap the springs of bliss within you, you cannot have peace and lasting contentment. The name manava (man) itself means, one who has no trace of ignorance. To deserve this name, you must remove your ignorance by incessant activity motivated by good impulses.(Divine Discourse, Mar 25, 1965.)
Divert the boat of your life to the lighthouse of divine love; you are then bound to gain the shore of bliss. -Baba
இலக்கை அடைய வேண்டும் என்ற தடுக்க இயலாத தாபத்துடன், நீங்கள் ஆன்மீகப் பாதையில் செல்ல வேண்டும்; மோக்ஷம் பெற வேண்டும் என்ற ஆர்வத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும். தர்மம்(நல் வழி நடத்தல்) , அர்த்தம் ( செல்வம்) , காமம் ( ஆசை) மற்றும் மோக்ஷம் என்ற நான்கு தூண்களின் மீது கட்டப் பட்ட இல்லத்தில் நீங்கள் வசிக்க வேண்டும். அதாவது, செல்வத்தை தார்மீக வழிகளில் ஈட்ட வேண்டும்; மோக்ஷம் அடைய வேண்டும் என்ற ஒரே ஆசை மட்டுமே இருத்தல் வேண்டும். எவ்வளவு செல்வத்தை ஈட்டினாலும், வலிமையை வளர்த்துக் கொண்டாலும்,உங்களுள் உள்ள ஆனந்தம் என்ற ஊற்றின் குழாயைத் திறக்கவில்லை என்றால், நிரந்தரமான சாந்தியையும், திருப்தியையும் அடைய முடியாது. '' மானவ ''( மனிதன் ) என்ற பெயரின் அர்த்தமே இம்மியளவும் அறியாமை அற்றவன் என்பதாகும்.இந்தப் பெயருக்குத் தகுதி உள்ளவராக இருக்க வேண்டும் என்றால்,நல்ல உந்துதல்களால் ஊக்குவிக்கப் பட்ட இடையறாத பணிகளினால், அறியாமையை நீங்கள் கட்டாயம் அகற்ற வேண்டும்.
தெய்வீக அன்பு என்ற கலங்கரை விளக்கத்தை நோக்கி வாழ்க்கை என்ற கப்பலைத் திருப்பிச் செலுத்துங்கள்; ஆனந்தம் என்ற கரையை கட்டாயம் அடைவீர்கள் - பாபா