azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Saturday, 14 Apr 2012 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Saturday, 14 Apr 2012 (As it appears in 'Prasanthi Nilayam')

Mere external cleanliness is not enough, you must cleanse your mind and develop inner purity. Remember, the all-pervasive God is present within everyone. You must aspire and work for the happiness of others. True celebration lies, in each sharing the happiness of the other. Give happiness to others. Only then you have the right to receive it from others. Always practice “Give and Take”. Strive for the welfare of everyone, not just you and your family.(Divine Discourse, Apr 15, 2003.)
வெறும் வெளிப்புறத் தூய்மை மட்டும் இருந்தால் போதாது, நீங்கள் மனதைத் சுத்தப் படுத்தி,அகத் தூய்மையை வளர்த்துக் கொள்ள வேண்டும். எங்கும் நீக்கமற நிறைந்துள்ள இறைவன் ஒவ்வொருவருள்ளும் இருக்கிறான் என்பதை நினைவில் கொள்ளுங்கள். நீங்கள் மற்றவர்களது சந்தோஷத்தை நாடி அதற்காக பணி ஆற்ற வேண்டும். ஒவ்வொருவரும் தங்களது சந்தோஷத்தை, பகிர்ந்து கொள்வதில் தான் உண்மையான கொண்டாட்டம் உள்ளது. பிறருக்கு சந்தோஷத்தை அளியுங்கள். அதன் பின்னர் தான் பிறரிடமிருந்து சந்தோஷத்தைப் பெறுவதற்கு உங்களுக்கு உரிமை கிடைக்கிறது. எப்போதும் ' விட்டுக் கொடுக்கும்'' மனப்பாங்கை நடைமுறைப் படுத்துங்கள். உங்களது மற்றும் உங்கள் குடும்பத்தினரது சந்தோஷத்திற்காக மட்டும் அல்லாது அனைவரது நலனுக்காகவும் பாடுபடுங்கள்.