azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Wednesday, 11 Apr 2012 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Wednesday, 11 Apr 2012 (As it appears in 'Prasanthi Nilayam')

Everybody aspires for happiness. Where is happiness? Without working hard, you cannot get happiness. During ancient times, people would offer their salutations to action (karma) before undertaking it; they chanted thasmai namah karmane (salutations to action). In India, some people follow this sacred tradition even today. A dancer salutes the anklets before tying them to the feet. Even an uneducated driver offers his obeisance to the steering wheel before driving the vehicle and some cricketers too, pay their respects to the ball before starting to bowl. First and foremost, offer respects and express gratitude to karma before undertaking it. Make it a practice every day. It will then give good results. Understand your duty and perform it to the best of your abilities. Then, you will earn the deservedness to experience happiness. - Divine Discourse, Apr 15, 2003.
ஒவ்வொருவரும் சந்தோஷத்தை நாடுகிறார்கள். சந்தோஷம் எங்கே இருக்கிறது? கடுமையாக உழைக்காமல் நீங்கள் சந்தோஷத்தைப் பெற முடியாது. பழங்காலத்தில் மக்கள் ஒரு பணியை ஆரம்பிக்கும் முன் அதற்கு '' தஸ்மை நம: கர்மணே '' என்று கூறி நமஸ்காரம் செய்வார்கள். இந்தியாவில் இன்றும் சிலர் இந்த வழக்கத்தைப் பின் பற்றுகிறார்கள். நாட்டியம் ஆடுபவர் சலங்கைகளை காலில் கட்டுவதற்கு முன் அதை வணங்குகிறார். படிப்பறிவில்லாத ஒரு வாகனம் ஓட்டுபவர் கூட, வண்டியை ஓட்டத் தொடங்கும் முன் தனது வணக்கங்களை ஸ்டியரிங் வீலிற்குச் செலுத்துகிறார். சில கிரிக்கட் விளையாட்டு வீரர்கள் கூட பந்தை வீசுவதற்கு முன் அதற்கு தங்களது மரியாதையை செலுத்துகிறார்கள். முதன் முதலில் ஒரு கர்மாவைத் தொடங்கும் முன் அதற்கு மரியாதையையும்,நன்றியையும் தெரிவியுங்கள். அதை தினசரிப் பழக்கமாக்கிக் கொள்ளுங்கள். அது நல்ல பலன்களைத் தரும். உங்களது கடமையை நன்றாக உணர்ந்து உங்களது சிறந்த திறமையுடன் அதை ஆற்றுங்கள். பின்னர், நீங்கள் சந்தோஷத்தை அனுபவிப்பதற்கான தகுதியைப் பெறுவீர்கள்.