azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Tuesday, 10 Apr 2012 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Tuesday, 10 Apr 2012 (As it appears in 'Prasanthi Nilayam')

The spiritual aspirants in the midst of their efforts sometimes imagine God to be less glorious than He really is! They feel that the Lord differentiates between sinners and saints or the ignorant and the wise; these are unsound inferences. The Lord does not separate men thus. If He really did so, no sinner can survive His anger on earth for even a minute. This truth is known only to the wise. Ordinary people are unaware of this and suffer under the false belief that the Lord is somewhere far away from them. It is the nature of fire to warm you when you shiver from cold. But how can it help you keep warm if you keep away at a distance! Similarly those who are earnest to remove the chills of worldly ills have to seek the fire of wisdom (Jnana), which is won by the grace of God. And that is how a wise man (Jnani) is declared as dear to the lord.(Geetha Vahini, Chap 13.)
Just as the end of culture is progress, the end of knowledge is love. Similarly, the end of wisdom is freedom. -Baba
ஆன்மீக சாதகர்கள் தங்களது முயற்சிகளின் நடுவில், சில சமயம் இறைவனை அவனது உண்மையான மேன்மையை விட குறைவாக உள்ளவனாகக் கருதுகிறார்கள் ! இறைவன், பாவிகள், ஆன்றோர்கள், அல்லது அறிவாளிகள்,அறிவிலிகள் எனப் பாகுபடுத்துகிறான் என எண்ணுகிறார்கள்; இவை தவறான முடிவுகள்.இறைவன் மனிதர்களை இவ்வாறு பிரிப்பதில்லை.அவன் உண்மையிலேயே அவ்வாறு செய்தால்,ஒரு பாவி கூட இந்த பூமியில் ஒரு கணம் கூட அவனது சீற்றத்தைத் தாங்க மாட்டான். இந்த உண்மை ஞானிகளுக்கு மட்டுமே தெரிந்த ஒன்று. சாதாரண மனிதர்கள்இதை அறியாது,இறைவன் அவர்களிலிருந்து வெகு தொலைவில் இருக்கிறான் என்ற தவறான நம்பிக்கையினால் அவதிப் படுகின்றனர். நீங்கள் குளிரில் நடுங்கும்போது உங்களை உஷ்ணப்படுத்துவது நெருப்பின் இயல்பாகும். ஆனால் நீங்கள் தொலைவில் இருந்தால் அது எப்படி உங்களுக்கு வெப்பம் தந்து உதவ முடியும்?அதைப் போலவே, உலகத் துன்பங்கள் என்ற குளிரை நீக்க வேண்டும் என்ற பேரவா கொண்டவர்கள், இறைவனது அருளால் பெறக்கூடிய ஞானம் என்ற நெருப்பை நாட வேண்டும். அதனால் தான், ஞானி இறைவனுக்குப் பிரியமானவன் எனப் பறைசாற்றப் படுகின்றான்.
எப்படி கலாசாரத்தின் முடிவு முன்னேற்றமோ, அறிவின் முடிவு அன்பாகும். அதைப்போலவே ஞானத்தின் முடிவு மோக்ஷமாகும் - பாபா