azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Monday, 09 Apr 2012 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Monday, 09 Apr 2012 (As it appears in 'Prasanthi Nilayam')

The very first thing you must do, to impress upon your mind the reality, is to recite the Name of God and dwell on His Glory in the mind. This will ensure the tongue will not stray into lesser topics and the mind will not drag you into inferior matters. Remember, the journey of everyone is towards the cemetery. Every day brings you nearer to your final moment. So do not delay the duty that you must carry out for your own lasting good. Revere man; that is the first step towards reverence for God, for man is prathyaksha (perceptible) while God is paroksha (imperceptible). Endeavour to see the Lord that resides in the heart of every living being. This will certainly lead you to eternity and save you from births and deaths.(Divine Discourse, Mar 24, 1965.)
All are one. Be alike to everyone. -Baba
உண்மை நிலையை உங்கள் மனதில் பதியவைப்பதற்கு நீங்கள் முதலில் செய்ய வேண்டியது, நாமஸ்மரணையுடன் இறைவனது மேன்மையை தியானிப்பதே.இது நாக்கு, கீழ்த்தரமான தலைப்புக்களில் திரியாமல் இருப்பதையும், மனம், தாழ்மையான விஷயங்ளை நோக்கி ஈர்க்கப் படாமல் இருப்பதையும் உறுதி செய்யும். அனைவரது பயணமும் கல்லறையை நோக்கித் தான் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.ஒவ்வொரு நாளும் உங்களது இறுதி தருணத்தின் அருகாமையில் உங்களைக் கொண்டு செல்கிறது. உங்களது நிரந்தரமான நன்மைக்காக நீங்கள் ஆற்ற வேண்டிய கடமையை தாமதப் படுத்தாதீர்கள். மனிதரை மதியுங்கள்; அதுவே இறைவனை மதிப்பதற்கான முதல் படி ஏனெனில் மனிதன் கண்முன் தெரிபவன் ( ப்ரத்யக்ஷா ),இறைவனோ கண்களுக்குப் புலப்படாதவன் ( பரோக்ஷா).ஒவ்வொரு ஜீவ ராசியின் இதயத்தில் வாசம் செய்யும் இறைவனைக் காண பெரு முயற்சி செய்யுங்கள்.இது உங்களை அமரத்துவத்திற்கு கண்டிப்பாக இட்டுச் சென்று பிறப்புகள் மற்றும் இறப்புகளிலிருந்து காப்பாற்றும்.
அனைவரும் ஒன்றே. அனைவரிடமும் ஒரேமாதிரி இருங்கள் - பாபா