azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Thursday, 05 Apr 2012 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Thursday, 05 Apr 2012 (As it appears in 'Prasanthi Nilayam')

Individual reconstruction is the most important need today. Multiply virtues, not buildings. Practise what you preach, that is the real pilgrimage. Cleanse your minds of envy and malice; this is the real bath in holy waters. Of what avail is the Name of the Lord on the tongue, if the heart within is impure? Injustice and discontent are spreading everywhere, due to this one single fault in humans – saying one thing and doing the opposite. You must set yourself right and correct your food, recreation and method of spending your leisure and your thoughts and habits. Remove the vices of lust and hatred, and put out the raging flames of anger and greed. Then, the innate tranquillity and happiness (shantham and soukhyam) within you, will manifest unhindered. You are the embodiment of peace; happiness is your very nature.(Divine Discourse, Mar 24, 1965)
When you think, speak and do good, peace will reign. -Baba
தனி மனித புனரமைப்பே இன்றைய மிகவும் அத்தியாவசியமான தேவை. நற்பண்புகளைப் பெருக்கிக் கொள்ளுங்கள், கட்டிடங்களை அல்ல.நீங்கள் கூறும் அறிவுரையை,நீங்கள் பின்பற்றுங்கள், அதுவே உண்மையான புனித யாத்திரையாகும். உங்கள் மனதிலிருந்து பொறாமையையும், வன்மத்தையும் நீக்கி விடுங்கள்:இதுவே புனித தீர்த்தத்தில் நீராடுவதாகும். உள்ளிருக்கும் இதயம் தூய்மையாக இல்லாது,நாவில் மட்டும் இறை நாமம் இருந்து என்ன பயன்? மனிதர்களிடம் உள்ள ,சொல்வது ஒன்று,செய்வது மற்றொன்று என்ற இந்த ஒரே ஒரு குறையால், அநீதியும் அதிருப்தியும் எங்கும் பரவி வருகின்றன. நீங்கள் உங்களை சரி செய்து கொள்ள வேண்டும்: மேலும் உங்களது உணவு, பொழுதுபோக்கு, ஓய்வு நேரத்தைச் செலவிடும் முறை, எண்ணங்கள் மற்றும் பழக்கங்கள் ஆகியவற்றைத் திருத்திக் கொள்ள வேண்டும்.காம,க்ரோதங்களை விலக்கி, கோபம் மற்றும் பேராசை என்ற கொழுந்து விட்டு எரியும் தீயை அணைக்க வேண்டும்.பின்னர் உங்களுள்ளேயே உறையும் சாந்தமும்,சௌக்கியமும் தடையின்றி வெளிப்படும்.நீங்கள் சாந்தியின் பண்புருவமே : சந்தோஷம் உங்களது இயல்பான தன்மையே.
நீங்கள் எண்ணுவது,சொல்வது மற்றும் செய்வது நல்லவையாக இருந்தால் , சாந்தி ஆட்சி செய்யும். - பாபா