azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Wednesday, 04 Apr 2012 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Wednesday, 04 Apr 2012 (As it appears in 'Prasanthi Nilayam')

When Krishna said, “Remove the defect in vision, then the author of this Universe can be cognised,” Arjuna sought the cause for this faulty vision. Krishna explained, “Between Me and this universe, there moves maya (delusion). It is indeed a hard task for one to see beyond maya, for maya too is Mine. It is of the same substance; it is My creation and under My control. It will turn in a trice, even the mightiest among men, head over heels! Do not take maya to mean some ugly thing that has descended from somewhere else; it is an attribute of the mind which makes you ignore the true and the eternal Paramatma (Supreme Self) and instead value the manifold multiplicity of Name and Form. It causes the error of believing the body to be the Self, instead of the embodied (the Deha instead of the Dehi). To overcome maya is surely the most difficult task. Only those who are wholeheartedly attached to Me can conquer My maya.”(Geetha Vahini, Chap 13.)
Attachment is the result of Maya; Maya is the result of Karma (actions). It is desire that deludes and binds. -Baba
பகவான் ஸ்ரீ கிருஷ்ணர்,'' திருஷ்டியில் உள்ள குறையை நீக்கி விட்டால், பின் இந்த அகிலத்தைப் படைத்தவனை உணர முடியும்'' எனறு சொன்னபோது, அர்ஜூனன் குறை உள்ள திருஷ்டி ஏற்படுவதும் காரணத்தை வினவினான். ஸ்ரீ கிருஷ்ணர் விளக்குகிறார், '' எனக்கும்,இந்த அகிலத்திற்கும் இடையில் மாயை உலவுகிறது. இந்த மாயைக்கு அப்பாற்பட்டு காண்பது என்பது கடினமான காரியமே, ஏனெனில் மாயையும் என்னுடையதே. அதுவும் இதே பொருளால் ஆனதே: எனது படைப்பே மற்றும் என் ஆளுமையில் உள்ள ஒன்றே. மனிதர்களில் மிகுந்த வலிமை கொண்டவர்களைக் கூட ஒரு நொடியில் அது தலை கீழாக ஆக்கி விடும் ! மாயை என்றால் எங்கிருந்தோ இருந்து இறங்கி வந்த அருவருப்பான ஒரு பொருளாக எண்ணாதே: அது, சத்தியமானதும், நிரந்தரமானதும் ஆன பரமாத்மாவை உதாசீனப்படுத்தி விட்டு, அதற்கு பதிலாக பல விதமான நாம ரூபங்களுக்கு மதிப்பு அளிக்கும் மனப்பாங்கே ஆகும். அதுவே உடலை ஏற்றுள்ள ஆத்மாவிற்குப் பதிலாக, இந்த உடலையே (தேஹிக்கு பதில் தேஹத்தை) ஆத்மா என்று நம்பும் தவறுக்குக் காரணமாகிறது. மாயையை வெல்லுவது என்பது நிச்சயமாக மிகவும் கடினமான பணியே. முழுமனதுடன் என்னையே பற்றியுள்ளவர்களால் மட்டுமே மாயையை வெல்ல முடியும்.''
பற்றுதல் மாயையின் விளைவே; மாயை கர்மாவின் விளைவே. ஆசையே மனதை மயக்கி பிணைப் படுத்துகிறது - பாபா