azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Tuesday, 03 Apr 2012 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Tuesday, 03 Apr 2012 (As it appears in 'Prasanthi Nilayam')

As the heart is to the body, so is the place of worship (Temple, Mosque, Church, etc.) to the community. Worship of God through various festivals, construction of places of worship, etc. are all good deeds (Sath Karma). They provide training in service and create opportunities for sacrifice and detachment. However be aware that when there is the anguished cry for food and shelter, money should not be spent on construction of new places of worship; this is not to be encouraged. The same Lord is worshipped everywhere, and you need not build a temple for every new Name or Form. Tell people to see in all Forms and under all Names the same God. That is the training they need.(Divine Discourse, Mar 24, 1965.)
The heart with compassion is the temple of God. -Baba
ஒரு உடலுக்கு இதயம் எவ்வாறோ, அவ்வாறு தான் ஒரு சமுதாயத்திற்கு இறைவனை வழிபடும் இடமும் (கோவில்,சர்ச்,மசூதி போன்றவை).பல தரப்பட்ட பண்டிகைகள் வழியாக இறைவனை வழிபடுவது,வழிபாட்டுத் தலங்களைக் கட்டுவது போன்றவை எல்லாம் நல்ல காரியங்களே ( ஸத் கர்மா). அவை சேவை ஆற்றுவதற்கான பயிற்சியைத் தந்து, தியாகம் செய்வதற்கும்,பற்றற்று இருப்பதற்கும் வாய்ப்புக்களை அளிக்கின்றன. ஆனால்,உணவிற்கும்,உறைவிடத்திற்கும் தவிக்கும் அழுகுரல் கேட்கும் போது, பணத்தை புதிய வழிபாட்டுத் தலங்களைக் கட்டுவதற்காகச் செலவிடக்கூடாது என்பதில் கவனமாக இருங்கள்;இதற்கு ஊக்கமளிக்கக் கூடாது. அதே இறைவன் தான் எங்கும் வழிபடப் படுகிறான்; நீங்கள் ஒவ்வொரு புதிய நாமத்திற்கும் ,ரூபத்திற்கும் கோவில் கட்டத் தேவை இல்லை. அனைத்து ரூபங்களிலும்,அனைத்து நாமங்களிலும் அதே இறைவனைக் காணுமாறு மக்களுக்குக் கூறுங்கள். இந்தப் பயிற்சிதான் அவர்களுக்குத் தேவை.
கருணை நிறைந்த இதயமே கடவுள் வாழும் இல்லம் - பாபா