azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Sunday, 01 Apr 2012 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Sunday, 01 Apr 2012 (As it appears in 'Prasanthi Nilayam')

Thousands of years have passed since the Treta Yuga (second quarter of time, the age in which Lord Rama was born), yet even now everyone, right from children to elderly people, remember the name of Rama. The glory of Rama’s name has not diminished even a bit with the passage of time. This truth should be recognised by all. Rama is the name given to a form, but is not limited to a form. Rama is the never changing Divine Principle (Atma). Therefore, wherever and whenever you remember the name of Rama, He is there with you, in you, around you. Rama is the personification of righteousness (Ramo vigrahavan Dharmaha). You should also follow Dharma (righteousness); not the principle of Dharma that comes from the mind but one that originates from your heart.(Divine Discourse, Mar 27, 2007)
To win Rama’s (God’s) grace, it is not enough to repeat His name; you have to practise the principles He stood for. -Baba
ஸ்ரீ ராமர் பிறந்த த்ரேதா யுகம் கழிந்து பல ஆயிரக்கணக்காண வருடங்கள் ஆகி விட்டாலும், இன்றும் கூட குழந்தையிலிருந்து முதியோர் வரை ஒவ்வொருவரும், ஸ்ரீ ராமரது நாமத்தை நினைவில் கொண்டுள்ளார்கள். ஸ்ரீ ராம நாமத்தின் மகிமை பல காலம் கடந்து விட்டபோதும் எள்ளவும் மங்கவில்லை. இந்த உண்மையை அனைவரும் உணர வேண்டும். ஸ்ரீ ராமர் என்பது ஒரு உருவத்திற்குக் கொடுக்கப் பட்ட பெயராக இருந்தாலும்,அது அந்த உருவத்தின் வரம்பிற்கு மட்டும் உட்பட்டதல்ல.ஸ்ரீ ராமா என்பது என்றும் மாறாத (ஆத்ம) இறைத் தத்துவம். எனவே எங்கோ, எப்போதோ, நீங்கள் ஸ்ரீ ராம நாமத்தை நினைவு கூர்ந்தாலும்,அவர் உங்களுடன், உங்களுள்,உங்களைச் சுற்றி இருக்கிறார். ஸ்ரீ ராமர் தர்மத்தின் ஸ்வரூபம் ( ராமோ விக்ரஹவான் தர்ம:) . நீங்களும், மனதிலிருந்து தோன்றுகின்ற தர்மத்தின் கொள்கையை அல்லாது, இதயத்திலிருந்து எழுகின்ற தர்மத்தின் கோட்பாட்டைப் பின்பற்ற வேண்டும்.
ஸ்ரீராமரின் அனுக்ரஹத்தைப் பெறுவதற்கு அவரது நாமத்தை உச்சரித்தால் மட்டும் போதாது; அவர் வாழ்ந்து காட்டிய கொள்கைகளைப் பின்பற்ற வேண்டும் - பாபா