azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Friday, 30 Mar 2012 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Friday, 30 Mar 2012 (As it appears in 'Prasanthi Nilayam')

The term Hindu signifies ‘H: Humility, I: Individuality, N: Nationality, D: Divinity, U: Unity’. These are verily our five life-breaths (pranas). Just as five elements, five senses, and five life-sheaths constitute our physical body; these five principles constitute the very essence of spirituality. Develop the spirit of unity. Never think that you belong to a particular state or country and thereby give rise to differences. Do not identify yourself with vyashti tattwa (individual principle). Instead, identify yourself with samashti tattwa (societal principle) and cultivate unity. Consider truth, righteousness, peace, love and nonviolence as your life-breath and uphold the sanctity of the name human (manava). Never give scope for differences of opinion, even in trivial matters. If any differences were to arise, each should be prepared to forgive the other. All are children of God; all are brothers and sisters. Understand this truth and conduct yourself accordingly. Divine Discourse, Mar 20, 2007.
Where there is confidence there is love, where there is love, there is peace. -Baba
" HINDU ", (ஹிந்து ) என்ற வார்த்தையில், '' H'' - Humility ( பணிவு ),'' I ''- Individuality ( தனித்தன்மை), '' N '' - Nationality ( தேசீய மனப்பாங்கு), '' D'' - Divinity ( தெய்வீகம் ), '' U ''-Unity (ஒற்றுமை), என்பவற்றைக் குறிக்கிறது. இந்த ஐந்தும் உண்மையில் நமது பஞ்ச பிராணன்களைப் போன்றவையே. எவ்வாறு நமது உடல் பஞ்ச பூதங்கள், ஐம்புலன்கள், ஐந்து கோசங்கள் எனப்படும் உள்ளுறைகள் ஆகியவையால் ஆனதோ, அவ்வாறே ஆன்மீகத்தின் சாரமே இந்த ஐந்து கோட்பாடுகளினால் ஆனதே. ஒற்றுமை மனப்பாங்கை வளர்த்துக் கொள்ளுங்கள். நீங்கள் ஒருபோதும் ஏதோ ஒரு மாநிலத்தையோ அல்லது நாட்டையோ மட்டும் தான் சார்ந்தவர் என்று எண்ணி அதனால் வித்தியாசங்களை தோற்றுவித்துக் கொள்ளாதீர்கள். உங்களை தனிமனித நோக்குடன் ( வ்யஷ்டி தத்வா) இணைத்துக் கொள்ளாது, சமூக நோக்குடன்( சமஷ்டி தத்வா) இணைத்துக் கொண்டு, ஒற்றுமையை வளர்த்துக் கொள்ளுங்கள். சத்யம்,தர்மம்,சாந்தி,ப்ரேமை மற்றும் அஹிம்சையை உங்கள் உயிர் மூச்சு எனக் கொண்டு, '' மானவ '' என்ற வார்த்தையின் புனிதத்துவத்தை நிலை நாட்டுங்கள். சின்ன விஷயங்களில் கூட வித்தியாசங்களுக்கு இடமளிக்காதீர்கள். வித்தியாசங்களை எழும்போது ஒருவரை ஒருவர் மன்னித்து விடத் தயாராக இருங்கள்.அனைவரும் இறைவனின் குழந்தைகளே; அனைவரும் சகோதர, சகோதரிகளே. இந்த உண்மையைப் புரிந்து கொண்டு அதன்படி நடந்து கொள்ளுங்கள்.
தன்னம்பிக்கை இருக்கும் இடத்தில் அன்பு இருக்கும் அன்பு இருக்கும் இடத்தில் சாந்தி இருக்கும் - பாபா