azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Wednesday, 28 Mar 2012 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Wednesday, 28 Mar 2012 (As it appears in 'Prasanthi Nilayam')

Your enemies are not outside. Your bad thoughts are your worst enemies and thoughts based on Truth are your best friends. But today, people do not befriend the thoughts based on Truth, which are essentially divine. Practise to make friendship with Sath, the eternal Truth. Sath means Being, the ever-present God. Worldly friends and enemies change with the passage of time, but sath is the true and eternal friend. This friend, God, is always with you, in you, around you, above you, below you and protecting you just as the eyelid protects the eye. Truth is God. Love is God. Dharma (righteousness) is God. When you worship God by following these principles, He will manifest Himself immediately. Love God wholeheartedly. Make friends with Him. You can achieve anything if you have God as your friend.(Divine Discourse, Mar 18, 1999)
Love knows no fear, no untruth, no anxiety and no grief. Love is God, Live in Love. -Baba
உங்களது எதிரிகள் வெளியில் இல்லை.உங்களது தீய எண்ணங்களே உங்களது மோசமான எதிரிகள்; சத்தியத்தை ஆதாரமாகக் கொண்ட எண்ணங்களே உங்களது மிகச் சிறந்த நண்பர்கள்.ஆனால் இந்நாளில் மக்கள்,உண்மையில் தெய்வீகமே ஆன, சத்தியத்தை ஆதாரமாகக் கொண்ட எண்ணங்களை, நண்பர்களாக ஆக்கிக் கொள்வதில்லை. என்றும் ஸாஸ்வதமான 'ஸத்' துடன் நட்பாக இருக்கப் பழக்கிக் கொள்ளுங்கள். '' ஸத்'' என்றால் இருப்பது,அதாவது என்றும் உள்ள இறைவன். உலகியலான நண்பர்களும் எதிரிகளும் காலப் போக்கில் மாறிக் கொண்டே இருப்பார்கள், ஆனால் '' ஸத்'' உண்மையான, ஸாஸ்வதமான நண்பன். இந்த நண்பனாகிய இறைவன் உங்கள் உடனும், உள்ளும், சுற்றியும், மேலும்,கீழும் எப்போதும் இருந்து,கண்ணின் இமையைப் போல உங்களைக் காக்கிறான்.ஸத்தியமே கடவுள். அன்பே இறைவன்.தர்மமே இறைவன்.நீங்கள் இந்தக் கொள்கைகளைப் பின்பற்றி இறைவனை வழிபடும் போது , அவன் உங்கள் முன் உடனே தோன்றுவான். இறைவனை முழு மனதாக நேசியுங்கள். அவனுடன் நட்பை வளர்த்துக் கொள்ளுங்கள். நீங்கள் இறைவனை நண்பனாக்கிக் கொண்டு விட்டால், எதையும் சாதிக்கலாம்.
அன்பு அச்சமோ,அஸத்தியமோ,கவலையோ, துயரமோ அறியாதது. அன்பே கடவுள். அன்பில் வாழுங்கள் - பாபா