azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Monday, 26 Mar 2012 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Monday, 26 Mar 2012 (As it appears in 'Prasanthi Nilayam')

People are bereft of gratitude, which is not right. One should be grateful for the help they have received from others as long as one is alive. There are two things you must forget: the help you have rendered to others and the harm others have done to you. If you remember the help you have rendered, you will always expect something in return. Remembrance of the harm done to you by others generates in you a sense of revenge. You should remember only the help you received from others. The one with these sacred qualities is an ideal human being. Love is God, love is Nature, love is life and love is the true human value. Bereft of love, one is equivalent to a corpse. Love even the worst of your enemies. Lead a life filled with love. Then you will experience joy, peace and security in your heart.(Divine Discourse, Mar 18, 1999)
When the heart is pure, the light of wisdom shines. -Baba
மக்கள் நன்றி உணர்வு அற்றவர்களாக இருக்கிறார்கள்,இது சரியல்ல.ஒருவர் தான் உயிருள்ளவரை பிறரிடமிருந்து பெற்ற உதவிக்காக நன்றியுடன் இருத்தல் வேண்டும். இரண்டு விஷயங்களை மறந்து விட வேண்டும்: நீங்கள் பிறருக்கு செய்த உதவி, மற்றொன்று பிறர் உங்களுக்குச் செய்த தீமை.நீங்கள் ஆற்றிய உதவியை நினைத்துக் கொண்டே இருந்தால், எப்போதும் அதற்குக் கைமாறாக எதையாவது எதிர்பார்ப்பீர்கள். பிறர் உங்களுக்கு இழைத்த தீமையை நினைவில் கொள்வது உங்களுள் பழி வாங்கும் உணர்வை உருவாக்கி விடும். நீங்கள் பிறரிடம் பெற்ற உதவியை மட்டுமே நினைவில் கொள்ள வேண்டும். இந்தப் புனித குணங்கள் கொண்டவரே இலட்சிய மனிதராவார். அன்பே இறைவன், அன்பே இயற்கை,அன்பே வாழ்க்கை, மேலும் அன்பே உண்மையான மனிதப் பண்பு. அன்பற்றவர் பிணத்திற்குச் சமம். உங்களது எதிரிகளில் மிகவும் கொடியவரிடம் கூட அன்பு செலுத்துங்கள்.அன்பால் நிரம்பிய வாழ்க்கையை நடத்துங்கள். பின் நீங்கள் ஆனந்தம்,சாந்தி மற்றும் பாதுகாப்பை உங்கள் இதயத்தில் அனுபவிப்பீர்கள்.
இதயம் தூய்மையானதாக இருந்தால், ஞான ஒளி பிரகாசிக்கும் - பாபா