azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Saturday, 24 Mar 2012 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Saturday, 24 Mar 2012 (As it appears in 'Prasanthi Nilayam')

The purpose of human life is not to be consumers of food, to be a burden upon the earth, and be an animal that is a slave to the senses. There is no profit in being a horde of idlers and loungers, who shy from hard work, and accumulate fat, growing into monstrous shapes. Nor should one ignore the creator, allowing both intelligence and discrimination to go to waste, without an iota of gratitude to the giver of all the gifts which one consumes and enjoys! The Lord has declared that He is the Pourusha (vitality, adventure and aspiration) in human beings. However strong may be the force of the drag of one’s previous births, it must yield to the strength of adventure and achievement emanating from this Pourusha. Unaware of this potentiality, you are misled into cursing your fate and accepting the ‘inescapable’ effects of what you dread as 'Prarabdha' or effects of karma (past actions). Exercise Pourusha and let it be your life breath. Living is struggling, striving, achieving.(Geetha Vahini, Chap 12).
Where the qualities of zeal, determination, courage, intelligence, ability and heroism are present, there Divine help manifests. -Baba
மனித வாழ்வின் குறிக்கோள்,உணவை விழுங்குபவர்களாகவும் ,இந்த பூமிக்குப் பாரமாகவும் மேலும் புலன்களுக்கு அடிமையாகி விட்ட ஒரு மிருகமாகவும் இருப்பது அல்ல. கடுமையாக உழைப்பதற்கு மறுத்து, கொழுப்பைச் சேகரித்து பூதாகரமான வடிவங்களாக உருவெடுத்து, சோம்பிச் சுற்றித் திரியும் கூட்டமாக இருப்பதில் எந்த லாபமும் இல்லை. படைத்தவனை உதாசீனப் படுத்தி, புத்தியையும் பகுத்தறிவையும் வீணடித்து, தான் உண்டு அனுபவிக்கின்ற அனைத்து பரிசுகளையும் அளித்தவருக்கு இம்மியளவு நன்றி உணர்வு அற்றவர்களாக இருப்பதிலும் பயன் இல்லை! இறைவன், தான் மனிதர்களில் பௌருஷா ( வீரியம், துணிவு, நாட்டம் ) ஆக இருக்கிறேன் என்று பறை சாற்றுகிறார். முற்பிறவிகளின் (வினைப்பயன்களின்) பின்னிழுப்பு எவ்வளவு சக்தி வாய்ந்ததாக இருந்தாலும் , இந்த பௌருஷத்திலிழுந்து வரும் துணிவு மற்றும் சாதனைத் திறனுக்கு அடிபணிந்தே ஆக வேண்டும். இந்த ஆற்றலை அறியாது, உங்கள் விதியை நொந்து கொள்வதிலும் கர்மா அல்லது ப்ராரப்தம் என்ற ஊழ்வினையின் தப்பிக்க இயலாத பலன்களை ஏற்றுக் கொள்வதிலும் தவறாக இட்டுச் செல்லப் படுகிறீர்கள். பௌருஷத்தைப் பயன்படுத்தி அதை உங்களது உயிர் மூச்சாக்கிக் கொள்ளுங்கள். வாழ்வது என்பது போராடுவது, கடுமையாக முயல்வது மற்றும் சாதிப்பது ஆகும்.
எங்கு உற்சாகம், உறுதி, தைர்யம், புத்தி, திறன் மற்றும் வீரம் இருக்கிறதோ அங்கு இறைவனது உதவி உருவெடுக்கிறது - பாபா