azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Thursday, 22 Mar 2012 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Thursday, 22 Mar 2012 (As it appears in 'Prasanthi Nilayam')

Today, people’s behaviour is not good because their thoughts are polluted. And because their thoughts and actions have become perverted, the country is passing through troubles and turmoil. People have filled their mind with thoughts of mundane, ephemeral, and transient things. These thoughts are negative in nature; only those based on Truth are positive. If the feelings and intentions behind your actions are good, the results will also be good. Sacred thoughts, good words, and noble deeds are the true human values. Thoughts are your permanent assets. As is the thought, so is the mind. If thoughts are good, humanity will blossom into Divinity.(Divine Discourse, Mar 18, 1999.)
A heart saturated with love for God can never entertain thoughts of violence. -Baba
தற்காலத்தில் மனிதர்களது நடவடிக்கை அவர்களது எண்ணங்கள் மாசு படிந்திருப்பதால், நல்லவையாக இல்லை.அவர்களது எண்ணங்களும் செயல்களும் நெறி தவறி இருப்பதால் நாடும் துன்பங்களையும் குழப்பங்களையும் அனுபவித்துக் கொண்டிருக்கிறது. மனிதர்கள் தங்களது மனங்களை உலகியலான, குறுகிய காலமே இருக்கின்ற மற்றும் நிலையற்ற விஷயங்களைப் பற்றிய எண்ணங்களால் நிரப்பி உள்ளனர்.இந்த எண்ணங்கள் அனைத்தும் எதிர்மறையான தன்மை உடையவை; சத்தியத்தை ஆதாரமாகக் கொண்டவை மட்டுமே நேர்மறையானவை. உங்களது செயல்களின் பின்னணியில் உள்ள உணர்வுகளும், நோக்கங்களும் நல்லவையாக இருந்தால், விளைவுகளும் நல்லவையாகவே இருக்கும். புனிதமான எண்ணங்கள், நல்ல வார்த்தைகள் மற்றும் சீரிய செயல்கள் ஆகியவையே உண்மையான மனிதப் பண்புகள். எண்ணங்கள் உங்களது நிலையான சொத்துக்கள். எண்ணங்கள் எவ்வாறோ,மனமும் அவ்வாறே.எண்ணங்கள் நல்லவையாக இருந்தால் மனித குலம் தெய்வீகமாக மலரும்.
இறைவன் பால் கொண்ட அன்பால் நிறைந்திருக்கும் ஒரு இதயம் வன்முறையான எண்ணங்களுக்கு ஒருபோதும் இடமளிக்காது - பாபா