azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Tuesday, 20 Mar 2012 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Tuesday, 20 Mar 2012 (As it appears in 'Prasanthi Nilayam')

Divinity is one, and is the real basis for the Universe. Like the string for a garland and the foundation for a multi-storey building, Divinity penetrates and holds together everything and everyone; it is the foundation for the structure of the Universe. Only the flowers and buildings are visible to your eyes, not the string and the foundation. Unless you invest time and effort to reason it out, they escape your attention. That does not mean they are non-existent! Never be misled by the aadheya (the contained, the thing held) into denying the Aadhaar (the basis, the container). For the Seen, there is an Unseen Basis. To grasp the Unseen, the best means is inquiry, and the right proof is experience. For those who have experienced, no description is needed.(Geetha Vahini, Chap 12)
Education must open the eyes and enable them to recognize the One behind the many. -Baba
தெய்வம் ஒன்றே;இந்த பிரபஞ்சத்தின் உண்மையான ஆதாரமும் அதுவே. பூமாலையில் இருக்கும் கயிறைப் போல,ஒரு அடுக்கு மாடிக் கட்டிடத்தின் அஸ்திவாரம் போல, தெய்வீகம் ஒவ்வொன்றையும்,ஒவ்வொருவரையும் ஊடுருவி, இணைத்து நிறுத்தி வைக்கிறது;இந்த பிரபஞ்சம் என்ற கட்டிடத்தின் அடித்தளமும் அதுவே.வெறும் பூக்களும்,கட்டிடங்களுமே உங்கள் கண்களுக்குத் தெரிகின்றனவே அன்றி,கயிறும் அஸ்திவாரமும் தெரிவதில்லை. நீங்கள் நேரமும் ,முயற்சியும் எடுத்துக் கொண்டு ஆராய்ந்து பார்த்தால் அன்றி, இவை உங்களது கவனத்திலிருந்து தப்பி விடுகின்றன. அதனால் அவை இல்லை என்று ஆகி விடாது !ஒரு போதும் வைக்கப் பட்டுள்ளவை, நிலை நிறுத்தப் பட்டுள்ளவை ( ஆதேயம் )ஆகியவற்றை மட்டும் வைத்துக் கொண்டு, அடிப்படையானவை, பாத்திரம் ( ஆதாரம் ) ஆகியவை இல்லை என்று தவறாக எண்ணி விடாதீர்கள். கண்களால் காணக் கூடியவற்றிற்கு, கண்களுக்குப் புலப்படாதவையே ஆதாரம். கண்களுக்குப் புலப்படாதவற்றைப் பரிந்து கொள்வதற்கு, ஆராய்ச்சியே சிறந்த வழி, அனுபவமே சரியான சான்று. அனுபவத்தில் உணர்ந்தவர்களுக்கு, எந்த விதமான விளக்கமும் தேவை இல்லை.
கல்வி ஒருவரது (அகக்) கண்களைத் திறந்து, பலவற்றிற்கும் பின்னால் இருக்கும் அந்த ஒன்றை உணர உதவ வேண்டும் - பாபா