azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Thursday, 15 Mar 2012 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Thursday, 15 Mar 2012 (As it appears in 'Prasanthi Nilayam')

Many of you are drawn to God due to health problems or mental worry of some sort or the other. Know that these are mere baits by which you have been drawn closer to God, so that you may contact Him, receive His Grace and strengthen your faith in the Divine. Problems and worries are really to be welcomed as they teach you the lessons of humility and reverence. Today, the entire world faces many problems. Many hesitate to believe that things will improve and that life for all will be happy and full of joy, that the Golden Age will ever recur. Be assured that Divinity will always be present to protect and establish righteousness, and avert the crisis upon humanity.(Divine Discourse, Mar 3, 1965)
It is a sign of indolence to think that you won’t suffer from grief or loss; they are inevitable. Earn the Grace of the Lord every minute; then, even mountains of sin can be reduced to dust. - Baba
உங்களில் பலர் உடல் நலப் பிரச்சனைகளாலோ, அல்லது சில விதமான மன வருத்தங்களினாலோ, இறைவன் பால் ஈர்க்கப் படுகிறீர்கள்.இவை யாவும்,உங்களை இறைவன் அருகில் இட்டுச் சென்று, அவனுடன் தொடர்பை ஏற்படுத்தி,அவன் அருளைப் பெற்று, அவன் மீது உங்களின் நம்பிக்கையை திடமாக்கிக் கொள்வதற்கான வெறும் தூண்டில் போன்றவை என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். உங்களுக்குப் பணிவு மற்றும் பிறர் மீது மரியாதை செலுத்துவதற்கான பாடங்களை கற்றுத் தருவதால் நீங்கள் பிரச்சனைகளையும், கவலைகளையும் உண்மையில் வரவேற்க வேண்டும்.இன்று இந்த உலகம் அனைத்தும் பல பிரச்சனைகளை எதிர் கொண்டுள்ளது. நிலைமை மேம்பட்டு, வாழ்க்கை சந்தோஷமும்,ஆனந்தமும் நிறம்பியதாக இருக்கும்; பொற்காலம் மீண்டும் மலரும் என்று நம்ப பலர் தயங்குகிறார்கள். தெய்வம் உங்களைக் காத்து , தர்மத்தை நிலை நாட்டுவதற்கு எப்போதும் இருக்கிறது; மனித குலத்திற்கு ஏற்படும் நெருக்கடியைத் தவிர்த்து விடும் என்பதை திடமாக நம்புங்கள்.
நீங்கள் துக்கத்தினாலோ,நஷ்டத்தினாலோ பாதிக்கப் படமாட்டீர்கள் என்று எண்ணுவது சோம்பேறித்தனத்தின் அறிகுறி; இவை தவிர்க்க முடியாதவை. ஒவ்வொரு கணமும் இறைவனது அருளைப் பெறுங்கள்; பின்னர் மலை அளவு பாவத்தையும் பொடிப் பொடியாக்கி விட முடியும். - பாபா