azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Saturday, 10 Mar 2012 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Saturday, 10 Mar 2012 (As it appears in 'Prasanthi Nilayam')

Give up the idea that you are the doer and the beneficiary by dedicating both deed and fruit to God. Then no sin can affect you, for you are not the doer and the deed must certainly be holy. Like oil on the tongue and a lotus leaf on water, the deed is with you, but not of you. Always remember this: you are not the doer; you are just the witness, the see-er! Hence, in whatever you do or hear or see, you must remain unaffected, innocent of listening or seeing. Thus, you can confidently take up all tasks and firmly give up the fruit of your activities, dedicating them to the Lord.(Geetha Vahini, Chap 11)
You should be heroes in practice, not merely in platform speeches. - Baba
செயல் மற்றும் அதன் பலனை இறைவனுக்கு அர்ப்பணம் செய்வதன் மூலம் , நீங்கள் தான் அந்த செயலைச் செய்பவர் மற்றும் அதன் பலனை அனுபவிப்பவர் என்ற எண்ணத்தை விட்டு விடுங்கள். பின்னர் எந்தப் பாவமும் உங்களை பாதிக்காது,ஏனெனில் செயலை ஆற்றியவர் நீங்களல்ல;மேலும் அந்தச் செயலும் நிச்சயம் புனிதமானதே.நாக்கில் உள்ள எண்ணெய் மற்றும் தாமரையில் உள்ள தண்ணீரைப் போல,செயல் உங்களுடன் இருக்கிறது ஆனால் உங்களால் அல்ல.எப்போதும் நினைவில் கொள்ளுங்கள்;செயலை ஆற்றுபவர் நீங்களல்ல,நீங்கள் வெறும் சாட்சியே,அதைக் காண்பவரே! எனவே, நீங்கள் எதைச் செய்தாலும்,கேட்டாலும்,கண்டாலும் ,கேட்டதை அல்லது பார்த்ததைத் தெரியாவதரைப் போல பாதிக்கப் படாமல் இருக்க வேண்டும். இவ்வாறு நீங்கள் எல்லாப் பணிகளையும் தன்னம்பிக்கையுடன் ஏற்றுக் கொண்டு, ,உங்களது பணிகளின் பலன்களை இறைவனுக்கு அர்ப்பணம் செய்வதன் மூலம், அவற்றை உறுதியாக விட்டு விடலாம்.
வெறும் மேடைப் பேச்சில் மற்றும் இன்றி, நீங்கள் நடைமுறையில் தலைவர்களாக இருக்க வேண்டும் - பாபா