azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Friday, 09 Mar 2012 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Friday, 09 Mar 2012 (As it appears in 'Prasanthi Nilayam')

Just close your eyes for five minutes and think of the profit your efforts have won for you. One wish always leads to another and this goes on like a never ending chain. Initially, you wish to marry, then you get a daughter or a son, after this you desire to finish their education, marriage and the list goes on and on. The joy one gets by fulfilment of any desire is imperfect, limited, temporary and pregnant with grief. The secret to true happiness lies in vairaagya (detachment). The tongue has oil, fat and greasy substances rolling over it, but it is unaffected by these and does not become greasy. The mind too must be tamed to be unaffected by the experience of success and failure, gain and loss, well-being and illness. Practice surrendering at the feet of the Lord at all times; let His will prevail.(Divine Discourse, March 3, 1965)
Avoid hating, envying or even disliking anyone. Put love into practice through service. – Baba
உங்கள் கண்களை ஐந்து நிமிடங்கள் மூடிக் கொண்டு உங்களது முயற்சிகள் உங்களுக்குப் பெற்றுத் தந்த லாபங்களை எண்ணிப் பாருங்கள். ஒரு விருப்பம் மற்றொன்றுக்கு இட்டுச் செல்கிறது;இது முடிவற்ற சங்கிலித் தொடர் போலச் சென்று கொண்டே இருக்கிறது. ஆரம்பத்தில்,நீங்கள் திருமணம் செய்து கொள்ள ஆசைப் படுகிறீர்கள்,அதன் பின் உங்களது ஆசை ஒரு பெண் அல்லது ஆண் குழந்தையைப் பெற வேண்டும், இதன் பின் அவர்களது படிப்பை முடிக்க வேண்டும் , திருமணம் செய்ய வேண்டும்,இந்தப் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது.எந்த ஆசையும் பூர்த்தி அடைவதால் ஒருவர் அடையும் சந்தோஷம் குறையுள்ளது, அளவானது,தாற்காலிகமானது மேலும் துக்கத்தினால் நிரம்பியது. உண்மையான சந்தோஷத்தின் ரகசியம் வைராக்கியத்தில் (பற்றின்மை) இருக்கிறது. நாக்கில் எண்ணெய்,கொழுப்பு,மற்றும் வழுவழுப்பான பொருட்கள் புரளுகின்றன, ஆனால் அவற்றால் நாக்கு பாதிக்கப் படுவதில்லை; எண்ணெய் பசை உள்ளதாக ஆவதில்லை. மனமும் அதே போலவே வெற்றி, தோல்வி, லாபம், நஷ்டம், ஆரோக்யம்,நோய் ஆகியவற்றின் அனுபவத்தால் பாதிக்கப் படாதவாறு நன்கு பழக்கப் படுத்தப் பட வேண்டும். எல்லாக் காலங்களிலும் இறைவனது பாதார விந்தங்களைச் சரணடைவதைப் பயிலுங்கள்; அவனது ஸங்கல்பத்தின் படி அனைத்தும் நடக்கட்டும்.
எவரையும் வெறுப்பது,பொறாமைப் படுவது,பிடிக்காமல் இருப்பது ஆகியவற்றைத் தவிர்த்து விடுங்கள். சேவையின் மூலம் அன்பை நடைமுறைப் படுத்துங்கள்- பாபா