azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Thursday, 08 Mar 2012 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Thursday, 08 Mar 2012 (As it appears in 'Prasanthi Nilayam')

Earnest and steady faith (Sraddha) is essential to acquire Jnana. In addition you must also possess a deep yearning to imbibe the teachings of your Guru. Be very vigilant; do not yield to sloth or to company that is not congenial or encouraging. To escape such evil influences and to strengthen your mind, mastery over senses is required. But remember, want of faith or steadiness is not as destructive as the venom of doubt. Doubt is born out of ignorance (Ajnana); it penetrates into your heart and breeds there - it is the source of all disaster! Arise and engage yourself in your daily activities, giving up desire for its results and with complete faith. Then you will acquire wisdom and win liberation.(Geetha Vahini, Chap 11)
Selfless and pure love leads you to God. Nature is the best example of Selflessness. – Baba
ஞானம் அடைவதற்கு ஸ்ரத்தை மிகவும் அவசியம்.இதைத் தவிர உங்களது குருவின் உபதேசங்களை மனதில் கொள்வதற்கான ஆழ்ந்த வேட்கை இருக்க வேண்டும்.கவனமாக இருங்கள்; சோம்பேறித்தனத்திற்கோ, ( இந்தப் பாதையில்) ஏற்புடைய அல்லது ஊக்கம் அளிக்காத நட்பிற்கோ இடம் கொடுக்காதீர்கள். இப்படிப்பட்ட தீய பாதிப்புக்களிலிருந்து தப்பித்து,உங்கள் மனதை வலுவாக்குவதற்கு, புலனடக்கம் தேவை. சந்தேகம் என்ற விஷத்தை விட நம்பிக்கை அல்லது உறுதி இல்லாமை அவ்வளவு தீமையானதல்ல. சந்தேகம் என்பது அஞ்ஞானத்திலிருந்து பிறக்கிறது;உங்களது இதயத்தை ஊடுருவி, அங்கு வளருகிறது-அதுவே அனைத்து பேரழிவுகளுக்கும் மூலாதாரம். எழுமின் ! உங்களது தினசரி வேலைகளில் அதன் பலன்களின் மீது ஆசையின்றி முழு நம்பிக்கையுடன் ஈடுபடுங்கள். பின்னர், நீங்கள் ஞானத்தைப் பெற்று, மோக்ஷம் அடைவீர்கள்.
தன்னலமற்ற மற்றும் தூய்மையான அன்பு இறைவனிடம் கொண்டு செல்கிறது. தன்னலமின்மைக்கு இயற்கையே சிறந்த உதாரணம் - பாபா