azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Wednesday, 07 Mar 2012 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Wednesday, 07 Mar 2012 (As it appears in 'Prasanthi Nilayam')

The world is a structure raised on one strong pillar - ”I". This "I” is dormant during your deep sleep and hence there is no world so far as you are concerned. Similarly before you were born, and after you die, there is no world of which you are conscious. To acquire and stay fixed in this Jnana (wisdom), you must pass through the preparatory schools of Karma (dedicated activity) and Upaasana (contemplation). Dedicated activity helps you cleanse the heart of egoistic impulses. Contemplation helps you to consistently focus attention on the Universal, the Absolute. Then jnaana emerges and stays within you for ever. Once you win that jnaana, you are the equal of the wisest, for there is nothing more to know.(Divine Discourse, March 3, 1965)
Let your every deed (Karma) be suffused with love, humility, compassion and non-violence. - Baba
" நான் " என்ற ஒரு வலுவான தூண் மீது எழுப்பப் பட்டுள்ள கட்டிடமே இந்த உலகம்.
இந்த '' நான் '' , ஆழ்ந்த உறக்க நிலையில் செயலற்று இருக்கிறது; எனவே உங்களைப் பொறுத்த அளவில் இந்த உலகம் இல்லை. இதைப் போலவே, நீங்கள் பிறக்கும் முன்பும்,இறந்த பிறகும் ,நீங்கள் உணரக்கூடிய நிலையில் உள்ள உலகம் எதுவும் இல்லை.இத்தகைய ஞானத்தைப் பெற்று அதில் நிலை கொண்டிருப்பதற்கு, நீங்கள் கர்மா (அர்ப்பணிக்கப்பட்ட செயல்) மற்றும் உபாஸனா ( இறைவனை நினைவு கூர்தல்), என்ற உங்களை ஆயத்தம் செய்கின்ற பள்ளிகளில் பயின்றாக வேண்டும். கர்மா உங்களது இதயத்தில் உள்ள அஹங்காரத் தூண்டுதல்ளைக் களைய உதவுகிறது. உபாஸனா , இடையறாது உங்களது கவனத்தை அந்த பரம்பொருளின் மீது ஒருமுகப்படுத்த உதவுகிறது. பின்னர் ஞானம் வெளிப்பட்டு, உங்களுடன் என்றென்றைக்கும் நிலைத்து நிற்கும். அந்த ஞானத்தை வென்றபின் நீங்கள் தலைசிறந்த ஆன்றோரை ஒத்தவராக ஆகிவிடுகிறீர்கள்; அதன் பின் அறிந்து கொள்வதற்கு எதுவுமே இல்லை.
உங்களது ஒவ்வொரு செயலும்,அன்பு,பணிவு,கருணை மற்றும் அஹிம்சையில் தோய்ந்திருக்கட்டும் - பாபா