azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Tuesday, 06 Mar 2012 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Tuesday, 06 Mar 2012 (As it appears in 'Prasanthi Nilayam')

Sincere repentance is enough to transmute sin into sanctity. The Lord graciously accepts contrition and pours His blessings. Did not the dacoit Rathnakara, who was engaged in acts of sin until the moment when wisdom dawned, become a saint through repentance? He became Sage Valmiki (the author of the epic Ramayana), is it not? His story is proof of the value of contrition. You may ask, is it enough to be free from the effects of sin alone? Should not the effects of punya (merit) be given up too? Yes, you should. Just as the roaring forest fire reduces to ashes everything in its way; so too the mighty conflagration of wisdom (Jnana) will consume and destroy all sin and all merit.(Geetha Vahini,Chap 11.)
When the heart is pure, the light of wisdom shines. - Baba
மனமார்ந்து தன் தவறுக்கு வருந்துவதே பாவத்தை அதன் குணம் மாற்றி புனிதத்துவம் அளிப்பதற்குப் போதுமானது. இறைவன் பச்சாதாபத்தை கருணையுடன் ஏற்றுக் கொண்டு தன் அருளைப் பொழிகிறான். ஞானம் தோன்றிய தருணம் வரை பாவச் செயல்களில் ஈடுபட்டிருந்த கொள்ளைக்காரனான ரத்னாகர், பச்சாதாபத்தின் காரணமாக முனிவராக ஆகவில்லையா? அவனே மஹாகாவியமான இராமாயணத்தைப் படைத்த வால்மீகி முனிவராக ஆனான், இல்லையா? அவரது கதையே பச்சாதாபத்தின் மதிப்பிற்கான சான்றாகும். பாவத்தின் பாதிப்புக்களிலிருந்து விடுபட்டால் மட்டும் போதுமா என்று நீங்கள் கேட்கலாம். புண்ணியத்தின் பலன்களையும் விட்டு விட வேண்டாமா? ஆமாம். நீங்கள் கட்டாயம் செய்ய வேண்டும். எவ்வாறு கொழுந்து விட்டு எரிகின்ற காட்டுத்தீ தன் பாதையில் காணும் அனைத்தையும் சாம்பலாக்கி விடுகிறதோ, அவ்வாறே பேராற்றல் கொண்ட ஞானத்தீயானது அனைத்து பாவ மற்றும் புண்ணியங்களை விழுங்கி அழித்து விடும்.
எப்போது இதயம் தூய்மையாக இருக்கிறதோ, அப்போது ஞானத்தின் ஒளி பிரகாசிக்கும் -பாபா