azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Saturday, 03 Mar 2012 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Saturday, 03 Mar 2012 (As it appears in 'Prasanthi Nilayam')

The frog caught and held in the mouth of a cobra, unaware of its fate, flicks at the snake’s tongue as if it were a fly to eat. So too, you seek joy and earn pain, hunt for pleasure and bag grief. You attach yourself to the body that decays, and let go of God. Thousands of wise men have advised about this a million times. However their words have not fallen on the soft soil of the heart and have not been watered by the tears of contrition. From now on, let your heart with clean consciousness, be a lamp. Pour into it the oil of Namasmarana (chanting of the Divine Name). Place the wick of Self-Control and keep it in position, so that the gusts of joy and grief do not scotch the flame. Light it with noble thoughts like Aham Brahmasmi (I am God). Then, you will not only have Light, but also become a source of Light.(Divine Discourse, March 1, 1965)
Only by the light of the Divine lamp inside can you blossom as a worthwhile person. - Baba
நாகப் பாம்பால் பிடிக்கப் பட்டு அதன் வாயில் கவ்வப்பட்டிருக்கும் தவளை, தனது விதியை உணராது,இந்தப் பாம்பின் நாக்கை,ஏதோ பூச்சி என்று எண்ணி நக்குகிறது. அதைப் போலவே, நீங்கள் இன்பத்தைத் தேடி,துன்பத்தை சம்பாதிக்கிறீர்கள்;சுகத்திற்காக வேட்டையாடி,துக்கத்தைப் பிடிக்கிறீர்கள். அழிகின்ற இந்த உடல் மீது பற்று வைத்து, இறைவனை விட்டு விடுகிறீர்கள். ஆயிரக்கணக்கான சான்றோர்கள் இதைப் பற்றி கோடிக்கணக்கான முறை அறிவுறுத்தி இருக்கிறார்கள்.இருந்த போதும் அவர்களது வார்த்தைகள் இதயத்தின் மிருதுவான மண்ணில் விழவில்லை; தவறுக்கு வருந்தி வடிக்கும் கண்ணீர் என்ற நீர் பாய்ச்சப் படவில்லை. இப்போதிலிருந்து உங்கள் இதயம் தூய மனச்சாட்சியுடன்,ஒரு ஒளி விளக்காகத் திகழட்டும். அதில் நாமஸ்மரணை என்ற எண்ணையை ஊற்றுங்கள். அதில் சுயக் கட்டுப்பாடு என்ற திரியை வைத்து,சுகம் ,துக்கம் என்ற பலமான காற்று அணைத்து விடாது காப்பாற்றுங்கள்.'' அஹம் பிரம்மாஸ்மி '' ( நானே இறைவன் ) என்ற சீரிய எண்ணங்களால் இந்த விளக்கை ஏற்றுங்கள். பின்னர், உங்களுக்கு ஒளி கிடைப்பதோடு மட்டுமல்லாது,நீங்களே அந்த ஒளியின் மூலமாகவும் ஆகி விடுவீர்கள்.
உங்களுள் இருக்கும் தெய்வீக விளக்கின் ஒளியினால் மட்டுமே, நீங்கள் பயனுள்ள மனிதராக மலரமுடியும் - பாபா