azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Friday, 02 Mar 2012 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Friday, 02 Mar 2012 (As it appears in 'Prasanthi Nilayam')

You must endeavour to please the Guru and win his favour by obeying his teachings and serving him lovingly. No matter where they live, those lives that are untouched by spiritual practices, noble qualities and serene environment imply that they do not even possess elementary gratitude to the Guru. They may chant slogans like Krishnarpanam (dedicating it to God) but their acts reveal only deha-arpanam (dedication to the body)! Modify your conduct to win your Guru’s grace; then, wisdom and bliss is yours. Instead, if you are disobedient and critical through egoism and want of faith, you cannot be blessed by the vision of the Truth. As the cow takes to her calf, so the Guru will draw the Sishya (disciple) to himself and grant him the milk of grace and bliss. The sishya (disciple) ought to be of sterling character; then, just as a clean piece of iron gets attracted by the magnet, he will automatically receive the blessings of the Guru.(Geetha Vahini, Ch 10)
நீங்கள் குருவின் போதனைகளுக்குக் கீழ்ப்படிந்து நடந்தும், அவருக்கு சேவை புரிந்தும், அவரை மகிழ வைத்து, அவரது அருளைப் பெற, பெரு முயற்சி செய்ய வேண்டும். ஒருவர் எங்கிருந்தாலும்,எவரது வாழ்க்கையில் ஆன்மீக சாதனைகள், சீரிய குணங்கள், மேலும் தெளிந்த அமைதியான சூழ்நிலை ஆகியவை இடம் பெறவில்லையோ,அதன் பொருள் அவர்களிடம் குருவிடம் காட்டவேண்டிய நன்றி உணர்வு எள்ளவும் இல்லை என்பதே ஆகும். அவர்கள் '' கிருஷ்ணார்ப்பணம்'' ( இறைவனுக்கே அர்ப்பணம் ) என்ற மந்திரங்களை உச்சரிக்கலாம், ஆனால் அவரது செயல்கள் '' தேஹார்ப்பணம்'' ( உடலுக்கு அர்ப்பணம் ) என்பதையே காட்டுகின்றன ! உங்களது நடத்தையை குருவின் அருளைப் பெறும் வண்ணம் மாற்றி அமைத்துக் கொள்ளுங்கள்; பின்னர் ஞானமும்,ஆனந்தமும் உங்களுக்கே. மாறாக,நீங்கள் பணிவின்றி,அஹங்காரம் மற்றும் நம்பிக்கையின்மையால் குறை காண்பவராக இருந்தால், சத்தியக் காட்சியின் அருள் உங்களுக்குக் கிட்டாது. தாய்ப் பசு எவ்வாறு கன்றுக் குட்டியைத் தேடி இழுத்துக் கொள்கிறதோ அதே போல குருவும், தன் சீடரைத் தன்பால் அணைத்துக் கொண்டு,அருள் மற்றும் ஆனந்தத்தின் பாலை அளிப்பார். சீடனுன் அப்பழுக்கற்ற குண நலன் படைத்தவராக இருத்தல் வேண்டும்; பின்னர் எவ்வாறு தூய்மையான ஒரு இரும்புத் துண்டு காந்தத்தினால் ஈர்க்கப் படுகிறதோ, அவ்வாறே சீடனும் குருவின் ஆசிகளை தானாகவே அடைவார்.