azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Tuesday, 28 Feb 2012 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Tuesday, 28 Feb 2012 (As it appears in 'Prasanthi Nilayam')

The word Jnana also means, the eagerness to realise the Atma thathwa (the Principle of the Atma) through inquiry from those with spiritual experience. If you are anxious to get this wisdom or experience, go to realised souls and win their grace. Study well their moods and manners, and await the chance to ask them for the help. When doubts arise, approach them calmly and courageously. No amount of sea water can slake one’s thirst. Similarly any hours of study of the scriptures will not help in solving our doubts. Jnana or the ultimate wisdom, can be won only from and through elders who have experienced the absolute. Serve them and win their love. Only then can this precious Jnana be won.(Geeta Vahini, Ch 10)
ஞானம் என்ற வார்த்தைக்கு,ஆன்மீக அனுபவம் பெற்றவர்களிடமிருந்து ஆத்ம தத்துவத்தை,விசாரித்து அறிந்து கொள்வதில் ஆர்வம் காட்டுவது என்றும் பொருள். இந்த ஞானம் அல்லது அனுபவத்தைப் பெறுவதில் நீங்கள் ஆர்வம் கொண்டிருந்தால்,தன்னை உணர்ந்த மகான்களிடம் சென்று அவர்களது ஆசிகளைப் பெறுங்கள். அவர்களது மனநிலை மற்றும் நடத்தைகளை கூர்ந்து கவனித்து, அவர்களிடம் உதவி கேட்கும் வாய்ப்பிற்காகக் காத்திருங்கள். சந்தேகங்கள் எழும்போது அமைதியாகவும் துணிவுடன் அவர்களை அணுகுங்கள்.கடல் தண்ணீர் எவ்வளவு இருந்தாலும் ஒருவரது தாகத்தைத் தீர்க்க முடியாது. அதே போன்று, எவ்வளவு நேரம் புனித நூல்களைப் படித்தாலும், அது நமது சந்தேகங்களைக் களைவதில் உதவி புரியாது. ஞானம் அல்லது இறுதியான அறிவை, பரம்பொருளை உணர்ந்த சான்றோர்களிடமிருந்து ,அவர்கள் மூலமே மட்டும் தான் பெற முடியும். அவர்களுக்கு சேவை புரிந்து அவர்களது அன்பைப் பெறுங்கள்.அதன் பின் தான் இந்த விலைமதிப்பற்ற ஞானத்தைப் பெற முடியும்.