azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Monday, 27 Feb 2012 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Monday, 27 Feb 2012 (As it appears in 'Prasanthi Nilayam')

All beings are Divine, and the Lord dwells in their hearts. Yet they feel bound,miserable, limited, weak and agitated. Why? They imagine thus, and so they are shaped by the mind which is the source of that imagination. They are ignorant of their reality. How then can one be freed from this delusion? If you desire to overtake a train, you must speed in a car or board a plane. A vehicle slower than the train will not help. So too if you intend to overcome the delusion of your mind, you must establish yourself in God. The delusion of Maanavasakthi (human-power) arising out of the mind can be overcome only by the attainment of Divine Power (Daivasakthi). One prayer that promotes the acquisition of Divine Power is the repetition of the Gayathri Mantra.(Divine Discourse Feb 25, 1965)
அனைத்து ஜீவராசிகளும் தெய்வீகமே;இறைவன் அவர்களது இதயங்களில் வாசம் புரிகிறான். இருந்தாலும்,அனைவரும் கட்டுண்டு, துயருற்று, குறுகி, சக்தியற்று, குழம்பி காணப்படுகிறார்கள். ஏன்? அவர்கள் தங்களை அவ்வாறு கற்பனை செய்து கொள்கிறார்கள்; எனவே அந்தக் கற்பனைகளின் மூலமான மனதினால்,அவர்கள் அவ்வாறு உருவாக்கப் படுகிறார்கள். அவர்கள் தங்களது உண்மை நிலையை அறியவில்லை. பின் எவ்வாறு அவர்கள் இந்த மாயையிலிருந்து விடுபட முடியும்? நீங்கள் ஒரு ரயில் வண்டியைத் தாண்டிச் செல்ல வேண்டும் என்றால்,வேகமாக ஒரு காரில் செல்ல வேண்டும் அல்லது ஒரு ஆகாயவிமானத்தில் பறக்க வேண்டும். ரயில் வண்டியை விட மெதுவாகச் செல்லும் வாகனத்தினால் பலனில்லை. அதைப் போலவே,உங்கள் மனதில் இருக்கும் மாயையை வெற்றி கொள்ள வேண்டும் என்றால், நீங்கள் உங்களை இறைவனுள் நிலை நாட்டிக் கொள்ள வேண்டும். மனதிலிருந்து எழும் மானவ சக்தியின் மாயையை, தெய்வ சக்தியைப் பெறுவதன் மூலமே வெற்றி கொள்ள இயலும்.இந்த தெய்வீக சக்தியைப் பெறுவதை மேம்படுத்துவதற்கான ஒரு பிரார்த்தனையே காயத்ரி மந்திரம்.