azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Sunday, 26 Feb 2012 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Sunday, 26 Feb 2012 (As it appears in 'Prasanthi Nilayam')

Perform abhisheka (ceremonial bath given to the Deity) to the Atma-linga (the Divine within), with the waters of your own pure mental impulses (Chittha-vritthi). What is true yajna (ceremonial sacrifice)? Giving in charity accumulated wealth is Dravya yajnam. When all physical and mental activities are utilised for sadhana (spiritual discipline) it is Thapo yajna. Doing karma (action) but yet remaining unbound by it, is Yoga Yajna. When the chittha (mind) moves in one direction and the indriyas (sense organs) move in another, the person is doubly confused. So keep attachment afar. When you accomplish this, every act of yours becomes a sacrifice (Yajna). Whatever you speak becomes a holy mantra; and the place where you plant your foot is rendered holy.(Geetha Vahini, Ch 10)
தூய்மையான மனத் தூண்டுதல்கள் என்ற புனித நீரினால் உங்களுள் உறையும் ஆத்ம லிங்கத்திற்கு அபிஷேகம் செய்யுங்கள். உண்மையான யக்ஞம் ( தியாகம்) என்பது என்ன? சேர்த்து வைக்கப் பட்ட செல்வத்தைத் தானம் செய்வது ''த்ரவ்ய யக்ஞம்''. எப்போது உடல் மற்றும் மனத் திறன்கள் ஆன்மீக சாதனைகளுக்கு பயன்படுத்தப் படுகின்றனவோ, அது ''தபோ யக்ஞம்''ஆகிறது. கர்மாவை செய்து கொண்டே, அதே சமயம் அதனால் கட்டுண்டு இல்லாமல் இருத்தல் ''யோக யக்ஞம்''. மனம் ஒருபுறமும்,புலன்கள் மற்றொரு புறமும் செல்லும்போது,ஒருவன் இரட்டிப்பு குழப்பம் அடைகிறான். எனவே பற்றுதல்களை வெகு தூரத்தில் வையுங்கள். இதை நீங்கள் சாதிக்கும் போது, உங்களது ஒவ்வொரு செயலும் யக்ஞம் ஆகிவிடும். நீங்கள் பேசுவதெல்லாம் தெய்வீக மந்திரம் ஆகிவிடும்; உங்களது பாதங்கள் பதிக்கப் படும் இடம் அனைத்தும் புனிதத்தலமாகி விடும்.