azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Saturday, 25 Feb 2012 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Saturday, 25 Feb 2012 (As it appears in 'Prasanthi Nilayam')

The aim of all human effort is to achieve the oneness that lies behind all the plurality. Without accomplishing this, one cannot be in peace. No amount of repetition of the shanthi manthra (hymn of peace) is capable of granting that. The same current activates the many seemingly distinct instruments like the bulb, the mike, the fan, the refrigerator, the tape recorder, the stove, etc. The Guru is the one who reveals to you that invisible current. The Guru is like the stranger who entered the cottage of a poor man and announced that underneath the floor in his home, lies hidden a precious treasure which he can own, by a few minutes of digging. And for this the Guru deserves your gratitude.(Divine Discourse, Feb 25, 1965.)
பலதரப்பட்ட அனைத்திற்கும் பின்னால் இருக்கும் அந்த ஒன்றினை அடைவதே அனைத்து மனித முயற்சிகளின் குறிக்கோளாகும். அதை அடையாமல் ஒருவர் சாந்தியுடன் இருக்க முடியாது. '' சாந்தி மந்திரத்தை '' ( ௐ சாந்தி, ௐ சாந்தி) எத்தனை தடவை உச்சரிப்பதும் இதைத் தர இயலாது. பல்ப், மைக், ஃபேன், ஃப்ரிஜ், டேப் ரிகார்டர், ஸ்டவ் என்று பல விதமாக கண்ணுக்குத் தென்படும் உபகரணங்களை,ஒரே மின்சாரம்தான் இயக்குகிறது. குரு என்பவர் இந்தக் கண்ணுக்குப் புலப்படாத மின்சாரத்தை உங்களுக்கு வெளிப்படுத்துகிறார். ஒரு ஏழையின் குடிசையில் நுழைந்து, அவனது வீட்டின் தரைக்கு அடியில் மறைந்து இருக்கும் விலை மதிப்பற்ற புதையலை, சில நிமிடங்களே தோண்டினால் கிடைக்கும் என்பதை அறிவிக்கும், புதியவரைப் போன்றவரே குரு என்பவர். இதற்காகவே, உங்களது செய்நன்றி அவருக்கே உரித்தானது ஆகும்.