azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Friday, 24 Feb 2012 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Friday, 24 Feb 2012 (As it appears in 'Prasanthi Nilayam')

Both the form (swarupa) and the nature (swabhava) of the Atma is such that it is unaffected and uninfluenced by anything that is ephemeral. The soul has no birth or death, hunger or thirst, grief or delusion! Birth and death are characteristics of the body; grief and delusion are afflictions of the mind. Do not assign any status to these; know yourself as the Atma, the Divine Self. Give up all delusion and become unattached. Do not be like the porous blotting paper that gets tainted with whatever it comes in contact with. Be the lotus leaf in the marshy lake of this samsara (worldly existence); do not get smeared with the mud around you. Be in the world, yet outside it.(Geetha Vahini, Ch 10)
ஆத்மாவின் ஸ்வரூபமும் ,ஸ்வபாவமும் எப்படிப் பட்டதென்றால், நிலையற்ற எதனாலும் அதற்கு பாதிப்போ,தாக்கமோ ஏற்படுவதில்லை. ஆத்மாவிற்கு பிறப்போ, இறப்போ, பசியோ, தாகமோ துக்கமோ, மாயையோ இல்லை ! பிறப்பு மற்றும் இறப்பு உடலின் தன்மை; துக்கம் மற்றும் மாயை மனதின் வியாதிகள். இவைகளுக்கு எந்த மதிப்பும் கொடுக்காதீர்கள்;நீங்கள் தெய்வீகமான ஆத்மா என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள். அனைத்து மாயையையும் விட்டொழித்து பற்றற்று இருங்கள். தன்னைத் தொடும் அனைத்தாலும் கரை படியும் நுண் துளைகள் கொண்ட உறிஞ்சும் காகிதத்தைப் ( ப்ளாட்டிங் பேப்பர்) போல இருக்காதீர்கள்.உலக வாழ்க்கை ( ஸம்ஸாரம் ) என்ற சேறு படிந்த ஏரியில் இருக்கும் தாமரை இலை போல இருங்கள்;உங்களைச் சுற்றி உள்ள சேற்றைப் பூசிக் கொள்ளாமல் இருங்கள்.உலகில் இருங்கள்;இருந்தாலும் அதற்கு அப்பாற்பட்டு இருங்கள்.