azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Tuesday, 21 Feb 2012 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Tuesday, 21 Feb 2012 (As it appears in 'Prasanthi Nilayam')

By the time it rains, if seeds have not been sown, will there be any crop in the field? If seeds are sown but there is no rain, will any cultivation happen? Both rain and seeds are needed for the harvest to be reaped. Likewise, Divine Grace will bear fruit only when there is human effort too. When there are good thoughts in the mind, they will be reflected as noble actions; on the other hand if the thoughts are ill-disposed, the fruits thereof will be equally bad. Different devotees are bound to differ in their ways of worshipping God. But whatever the method of worship, there must be one-pointed devotion. Love towards God is devotion. Love towards the world is attachment. Develop love for God. (Divine Discourse, Mar 2, 1992.)
மழை பெய்வதற்கு முன்பே, விதையிடவில்லை என்றால்,வயலில் ஏதாவது பயிர்கள் முளைக்குமா ? விதையிட்டு விட்டு மழை பொழியவில்லை என்றாலும், விவசாயம் தான் நடக்குமா? மழை, விதை என்ற இரண்டும் பயிரை அறுவடை செய்வதற்குத் தேவையானவையே. அதைப் போலவே,எப்போது மனித முயற்சி இருக்கிறதோ அப்போது தான் இறை அருளும் கிட்டும். மனதில் நல்ல எண்ணங்கள் இருந்தால், அவை சீரிய செயல்களாகப் பிரதிபலிக்கும்; அதே சமயம் எண்ணங்கள் தீயவையாக இருந்தால்,அதன் பலன்களும் அதே அளவு தீயவையாகவே இருக்கும். பல தரப்பட்ட பக்தர்கள் தங்களது இறை வழிபாட்டு முறைகளில் மாறுபட்டு இருக்கலாம். ஆனால் எப்படிப் பட்ட வழிபாட்டு முறையாக இருந்தாலும், ஒரே முனைப்புடைய பக்தி அவசியம். இறைவன் பால் கொள்ளும் அன்பே பக்தியாகும். உலகில் பால் கொள்ளும் அன்பே பற்றுதலாகும். இறைவன் பால் அன்பை வளர்த்துக் கொள்ளுங்கள்.